2 நாளில் சதாமுக்கு தூக்கு-அமெரிக்க ராணுவம்

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்:டிசம்பர் 31ம் தேதிக்குள் சதாம் உசேன் தூக்கிலிடப்படுவார் என அமெரிக்க ராணுவஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் சதாம்தூக்கிலிடப்படுவார் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஈராக்கின் துஜைல் நகரில் ஷியா முஸ்லீம்கள் 148 பேரை கொலை செய்த வழக்கில்சதாமுக்கு பாக்தாத் சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் தூக்குத் தண்டனை விதித்தது.இந்த தண்டனையை சமீபத்தில் மேல் முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.

Saddamஈராக் சட்டப்படி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்த 30 நாட்களுக்குள் அதைநிறைவேற்ற வேண்டும். எனவே சதாம் எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படக் கூடும்என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால் சதாம் எப்போது தூக்கிலிடப்படுவார் என்பது குறித்து ஈராக் அரசு கருத்துதெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவஉயர் அதிகாரிகள் சதாம் உசேன் தூக்கிலிடப்படுவது குறித்து புதிய தகவலைவெளியிட்டுள்ளனர்.

பக்ரீத் விடுமுறை தொடங்குவதற்கு முன்பாகவே சதாமைத் தூக்கிலிட அமெரிக்காதீவிரமாக உள்ளது. எனவே டிசம்பர் 31ம் தேதிக்குள் அதாவது இன்னும் 2நாட்களுக்குள் சதாமைத் தூக்கிலிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளையும் அமெரிக்க ராணுவமே செய்து வருகிறது. ஈராக் கூட்டணிஅரசில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள், சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில்சதாம் தூக்கிலிடப்படுவார்.

அவர் தூக்கிலிடப்படுவது வீடியோவில் படமாக்கப்படும் என்று அந்த ராணுவஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சதாம் உசேன் மீதான விசாரணையில் அமெரிக்காவின் தலையீடு இருந்தது என்பதுகுறித்து ஏற்கனவே பெரும் சர்ச்சை நிலவி வரும் நிலையில் தற்போது சதாமைத்தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளையும் அமெ>க்க ராணுவமே செய்து வருவதாகவெளியாகியுள்ள தகவல் மேலும் சர்ச்சையை வலுப்படுத்தியுள்ளது.

சதாமை தூக்கிலிட உலக நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில்அமெரிக்கா அவசரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தில் இறுதிமுடிவை இராக் அதிபர் தான் எடுக்க வேண்டும்.

அவர் அமெரிக்காவால் நியமிக்கப்பட்டவர் என்பதால் ஜார்ஜ் புஷ்சின் முடிவை அவர்ஆதரித்தாக வேண்டிய நிலையில் உள்ளார்.

தான் தூக்கில் போடப்படுவது உறுதியாகிவிட்டதால் தனது ஒன்றுவிட்ட சகோதரர்கள்இருவரை சதாம் சிறையில் சந்தித்தார். அப்போது அவர்களிடம் நாட்டுக்காகதூக்குக்குப் போக நான் தயார் என சதாம் தெரிவித்தார்.

மேலும் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள தனது குடும்பத்தினருக்கு சதாம் கடிதமும்தந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+