For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உண்மையின் நெருப்பில் யுஎஸ் பொசுங்கும்-சதாம்

By Staff
Google Oneindia Tamil News

பாக்தாத்:சதாம் உசேன் தனது வாழ்நாளின் பல்வேறு கால கட்டங்களில் பேசியவற்றிலிருந்துசில வரிகள்:

1991, ஜனவரி (வளைகுடாப் போரின் தொடக்கத்தின்போது) - மரணங்கள்அவர்களைத் தழுவும்போது அல்லாவின் கொடி உயரப் பறக்கும்.

Saddam1991, பிப்ரவரி - அமெரிக்கர்களை நாம் உலகின் அனைத்து மூலைகளிலும் துரத்திதுரத்தி அடிப்போம். அவர்களது இரும்புக் கூடுகள் எந்த வகையிலும் அவர்களைக்காக்கப் போவதில்லை. உண்மையின் நெருப்பில் சிக்கி அமெரிக்காவும்,அமெரிக்கர்களும் பொசுங்கிப் போவார்கள்.

2001,செப்டம்பர் (நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதல் குறித்து) - உலகம்முழுவதும் அமெ>க்கர்கள் விதைத்ததற்கு இப்போது அறுவடை செய்துள்ளனர்.

2002, ஆகஸ்ட் 9 (அமெரிக்காவின் போர் எச்சரிக்கை குறித்து) - இருளை நாம்தோற்கடித்து வெல்வோம். சாத்தானின் படைகள் தங்களது சவப் பெட்டிகளையும்கூடவே சுமந்து கொண்டு வருகின்றன. மிகப் பெரிய தோல்வியில் சிக்கி உயிரைவிடப் போகிறார்கள்.

2002, செப்டம்பர் 19 (ஐ.நா.வுக்கு அளித்த செய்தியில்) - ஈராக்கில் அணுஆயுதங்கள், ரசாயான ஆயுதங்கள், உயிரி ஆயுதங்கள் இல்லை. ஈராக்கை அழிக்கஅமெரிக்கா நினைக்கிறது. மத்திய கிழக்கில் உள்ள எண்ணை வளத்தை சுரண்டநினைக்கிறது. அப்படியே மத்திய கிழக்கில் உள்ள நாடுகளை தன் வசப்படுத்தமுயலுகிறது. எண்ணை வளத்தையும், பொருளாதார வளத்தையும் கைப்பற்றுவதன்மூலம் ஒட்டுமொத்த உலகையும் தனது பிடியில் கொண்டு வர அமெரிக்காநினைக்கிறது.

Saddam2003, ஜனவரி 17 (அமெரிக்காவின் தாக்குதல் அபாயம் குறித்து) - பாக்தாத்சுவர்களிலும், ஈராக்கின் பிற நகரங்களிலும் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவருகிறார்கள். தங்களது நாட்டைப் பாதுகாக்கவும், உயிரைப் பாதுகாக்கவும், எதி>களைவீழ்த்தவும் ஒட்டுமொத்த ஈராக்கும் வீறு கொண்டு எழுந்து நிற்கிறது.

2003, ஜனவரி 20 - நீங்கள் (ஈராக் மக்கள்) நிம்மதியாக தூங்குங்கள். நான்உங்களுக்காக தூங்காமல் இருக்கிறேன்.

2003, மார்ச் 20 (அமெரிக்க ஊடுறுவலின் முதல் நாளின்போது) - மனித குலத்திற்குஎதிராக ஜார்ஜ் புஷ் மிகப் பெரிய குற்றத்தை இழைத்து விட்டார்.

மார்ச் 24 - ஈராக் மக்களே அமெ>க்கர்கள் உங்களை தவறாக எடை போட்டுவிட்டார்கள். அமெரிக்க படைகளை எதிர்த்து நமது படையினரும், மக்களும்தீவிரமாக போராடிக் கொண்டுள்ளனர்.

2003, ஜூலை (தலைமறைவான பின்னர், ஆடியோ டேப் மூலமாக கூறியது) - வீரம்மிக்க வீரர்களைப் பாதுகாக்க மக்களே போராடுங்கள். ஊடுறுவல்வாதிகளுக்கும்,ஆக்கிரமிப்பாளர்களுக்கும் உளவு சொல்லாதீர்கள்.

நம்மிடம் ரசாயான ஆயுதங்கள் இருப்பதாக சொன்ன ஆக்கிமிரப்பாளர்களைப் பார்த்துஎங்கே ஆயுதங்கள் என்று ஆவேசமாக கேளுங்கள்.

2003, டிசம்பர் (அமெ>க்க படைகளிடம் பிடிபட்டவுடன்) - நான் சதாம் உசேன். நான்தான் ஈராக்கின் அதிபர்.

2005, டிசம்பர் ( விசாரணையின்போது) - நீங்கள் என்னை நெருப்பில் போட்டாலும்கடவுள் என்னை மன்னிப்பார். என்னை அவர்கள் நெருப்பில் போடட்டும். என்னைஎரிக்கட்டும். நான் கவலைப்பட மாட்டேன். ஈராக்கின் நலனுக்காக எனது உயிரைக்கொடுப்பேன். நான் அழ மாட்டேன்.

2006, டிசம்பர் (தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவுடன்) - நான் என்னை ஈராக்குக்ாகதியாகம் செய்யத் தயாராகி விட்டேன். எனது ஆத்மா தியாகப் பாதையில் நடைபோடஆரம்பித்து விட்டது. விரைவில் கடவுளின் நிழலை எனது ஆத்மா அடையும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X