கருணா கும்பல் தாக்குதல்-புலிகள் முறியடிப்பு!
கொழும்பு:மட்டக்களப்பு மாவட்டம் தொப்பிகலா என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின்முகாம்கள் மீது கருணா பிரிவினர் இன்று கடும் தாக்குதல் நடத்தினர். இதில் 30விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக கருணா தரப்பு கூறியது.
ஆனால், இந்தத் தாக்குதலை முறியடித்து விட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டைநடந்து வரும் நிலையில் இன்று காலை மட்டக்களப்பு அருகே உள்ள தொப்பிகலாஎன்ற இடத்தில் உள்ள புலிகளின் 3 முகாம்கள் மீது கருணா கும்பல் திடீர் தாக்குதல்நடத்தியது.
வடமுனை, தரவி பிராந்தியத்தில் உள்ள குடும்பிமலை என்ற இடத்தில் உள்ள புலிகளின் முகாம்கள் மீது இந்தத்தாக்குதல் நடந்தது.
ராணுவ உதவியோடு 200க்கும் மேற்பட்ட கருணா பிரிவினர் இந்தத் தாக்குதலில்ஈடுபட்டனர். ஆனால், கருணா கும்பலின் தாக்குதலை சமாளித்து பதில் தாக்குதலில் விடுதலைப் புலிகள்இறங்கினர்.
இந்தத் தாக்குதலில் 30 விடுதலைப் புலி வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் கருணாபிரிவைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்ததாகவும் கருணா பிரிவின் அரசியல் பிரிவானதமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஆசாத்மெளலானா கூறினார்.
ஆனால், இதை புலிகள் மறுத்துள்ளனர். விடுதலைப் புலிகளின் ராணுவ செய்தித் தாடர்பாளர் ராசய்யாஇளந்திரையன் கூறுகையில்,
இந்த மோதலில் கருணா கும்பலைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் படுகாயத்துடன் புலிகளால் சிறைபிடிக்கப்பட்டார். இந்த மோதலில் நான்கு விடுதலைப் புலிகள் காயமடைந்தனர். கருணா கும்பலுக்கு இலங்கைராணுவ வீரர்கள் உதவி செய்தது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications