673 பொது குழு உறுப்பினர்கள் ஆதரவு-எல்.ஜி
சேலம்:பொதுக் குழுவைக் கூட்டி முடித்து விட்டோம். தாயகத்தை கைப்பற்ற மாட்டோம். தனித் தாயகம் கட்டுவோம்.இனி மண்டலம் மண்டலமாக கூட்டம் நடத்தப் போகிறோம் என்று எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும்கூறியுள்ளனர்.
சேலத்தில் நேற்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும்செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் மொத்தம் 673 பொதுக்குழு உறுப்பினர்கள்கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களிடம் முறையாக கையெழுத்து பெறப்பட்டுள்ளது. பொதுக்குழுஉறுப்பினர்கள் என்பவர்கள், பல அந்தஸ்துகளை உடையவர்களாக இருக்கிறார்கள். அவைத் தலைவர், மாவட்டசெயலாளர், பொருளாளர் ஆகியோரும் பொதுக்குழு அந்தஸ்தைப் பெற்றவர்கள்தான்.
இக்கூட்டத்தில் திமுகவினர் யாரும் வரவில்லை. அப்படிச் சொல்வது தவறு. தாயகத்தைக் கைப்பற்றும் எண்ணம்எங்களுக்கு இல்லை. அங்கே போகவும் மாட்டோம். நாங்களே தனியாக ஒரு தாயகத்தை நிர்மாணிப்போம்.
நாங்கள்தான் உண்மையான மதிமுக. அவர்களும் அப்படிக் கூறினால் அதைத் தடுக்க மாட்டோம். கூறி விட்டுப்போகட்டும். எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்.
அடுத்த கட்டமாக மண்டலம் மண்டலமாக மாநாடு போடப் போகிறோம். எங்களின் நிலைப்பாட்டை விளக்க இதுதேவைப்படுகிறது. தேவைப்பட்டால் கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என்றனர்.
இதற்கிடையே, மதிமுகவின் உண்மையான பொதுக்குழு உறுப்பினர்களில் மொத்தமே 6 பேர்தான் எல்.ஜி.கூட்டிய பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக வைகோ தரப்பினர் கூறுகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications