ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
ஸ்ரீரங்கம்:திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிஇன்று காலை நடந்தது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டுபெருமாளை வணங்கினர்.
இந்தியாவில் உள்ள வைணவத் தலங்களில் முக்கியமானது ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமிகோவில். மொத்தம் உள்ள எட்டுத் தலங்களில் ஸ்ரீரங்கமே தொன்மையானதும்,முதன்மையானதுமாகும்.
இங்கு வைகுண்ட ஏகாதசி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.மொத்தம் 21 நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
முதலில் கொண்டாடப்படுவது பகல் பத்து, அடுத்து வருவது இராப்பத்து. இடையில்ஏகாதசி தினத்தன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு கோலாகலமாகநடைபெறும்.
அந்த வகையில் இன்று அதிகாலை 4.15 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடந்தது.சொர்க்க வாசல் வழியாக நம்பெருமாள் ஆடை, அணிகலன்களுடன்மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் அழைத்து வரப்பட்டார். அப்போது கூடியிருந்தலட்சக்கணக்கான பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக கோவிந்தா கோவிந்தா என்றுபக்திக் கோஷங்களை எழுப்பியபடி சென்று பெருமாளை சேவித்தனர்.
ஏகாதசி விரதம் இருந்து சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை சேவித்தால்,ஆண்டு முழுவதும் பெருமாளை தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியையொட்டி ஸ்ரீரங்கம் முழுவதம் பக்தர்கள் கூட்டம்நிரம்பி வழிகிறது. சமீபத்தில் பெரியார் சிலை சர்ச்சை எழுந்ததால் ஸ்ரீரங்கத்தில் பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும்மற்றும் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள பெரியார் சிலைக்கும் பலத்த பாதுகாப்புகொடுக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீரங்கத்தைப் போலவே மதுரை கூடலழகர் பெருமாள் கோவில், சென்னைபார்த்தசாரதி திருக்கோவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்டபெருமாள் கோவில்களிலும் இன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி வெகுவிம>சையாக நடந்தேறியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications