பாக். ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் இலங்கை
டெல்லி:பாகிஸ்தானிடமிருந்து 100 மில்லியன் டாலர் அளவிலான ஆயுதங்களை வாங்கஇலங்கை அரசு ஆர்டர் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக நாடுகள் வாங்கிக் குவிக்கும் ஆயுதங்கள் குறித்து செய்திகளை வெலியிடும்ஜேன்ஸ் பாதுகாப்பு வீக்லி இதழ் இதுதொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த 18 மாதங்களில் மட்டும் 200 மில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்கள் வாங்கஇலங்கை அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக அச்செய்தி கூறுகிறது. இந்திய மதிப்பில்இது ரூ. 450 கோடியாகும்.
தனது ராணுவ பலத்தை அதிகரிக்க பாகிஸ்தானிடமிருந்து அதிக அளவிலானஆயுதங்களை வாங்கிக் குவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. விடுதலைப்புலிகளுடனான போரை தீவிரப்படுத்த தற்போது இலங்கை அரசு பாகிஸ்தானைமுழுமையாக சார்ந்திருக்கத் தொடங்கியுள்ளதாக ஜேன்ஸ் வீக்லி கூறுகிறது.
பாகிஸ்தானிடமிருந்து ராணுவ டாங்குகள், கவச வாகனங்கள், வெடிகுண்டுகள்,வெடிபொருட்கள், ஆளில்லாத கண்காணிப்பு விமானங்களை வாங்க இலங்கை அரசுஆர்டர் கொடுத்துள்ளது.
இதுதவிர லேசர் குண்டுகள், போர்த் தளவாடங்கள், இரவிலும் தாக்கும் வசதி கொண்டவாகனங்கள் உள்ளிட்டவற்றையும் இலங்கை வாங்கவுள்ளது.
உக்ரைனிடமிருந்து இந்த ஆயுதங்களை வாங்கி இலங்கைக்கு பாகிஸ்தான்கொடுக்கிறதாம். ஆனால் இவற்றில் பல ஆயுதங்கள் பழுதானவையாக இருப்பதைசமீபத்தில் இலங்கை ராணுவம் கண்டுபிடித்துள்ளது. இவற்றைத் திரும்ப எடுத்துக்கொள்ள பாகிஸ்தான் சம்மதித்துள்ளதாம்.
தனது நாட்டு ஆயுதங்களை வாங்குமாறு இலங்கை ராணுவ அதிகாரிகள் பலருக்குபாகிஸ்தான் லஞ்சமும் கொடுத்துள்ளதாக பரபரப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன.தனது நாட்டு ஆயுதங்கள் சிறப்பாவை என்று இலங்கை அரசுக்கு எடுத்துச் சொல்லிஆயுதங்களுக்கான ஆர்டரை இலங்கை அரசு கொடுக்க ஏற்பாடு செய்ய இந்தலஞ்சத்தை பாகிஸ்தான் கொடுத்துள்ளதாம்.
லஞ்சப் பணமாக மட்டும் கிட்டத்தட்ட 20 மில்லியன் டாலர் பணம் (இந்திய மதிப்பில்ரூ. 90 கோடி) கைமாறியிருப்பதாக ஜேன்ஸ் வீக்லி கூறியுள்ளது.
பாகிஸ்தானிடம் ஆர்டர் கொடுக்கப்பட்ட ஆயுதங்கள் தற்போது இலங்கைக்குஅனுப்பும் பணி தொடங்கி விட்டதாம்.
பாகிஸ்தானிடமிருந்து அபாயகரமான ஆயுதங்களை இலங்கை அரசு வாங்கிக்குவிப்பது இந்தியாவின் பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்கும் எனவும் ஜேன்ஸ்வீக்லி எச்சரித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications