வானில் பறந்து நூதன திருமணம்!
ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு திருமண ஜோடி ஹாட் ஏர் பலூனில் பறந்து நூதன முறையில் திருமணம்செய்தது.
எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலை நாட்டவர்களைப் போல நம்மவர்களுக்கும்அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு ஜோடி ஹாட் ஏர் பலூனில் பறந்து திருமணம்செய்து சாதனை படைத்துள்ளது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் சுனில் வர்மா. இவருக்கும், ஆசிரியையான வந்தனாவுக்கும் திருமணம்நிச்சயிக்கப்பட்டது. இருவரும் வித்தியாசமாக திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு இரு வீட்டாரும்சம்மதித்தனர்.
இதைத் தொடர்ந்து பலூனில் பறந்து திருமணம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்.எம்.எஸ்.மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மைதானத்தில் திருமண சடங்குகள் அனைத்தும் நடந்தன.
பின்னர் பலூனில் மணமக்கள், இருவரின் பெற்றோர் மற்றும் புரோகிதர் உள்ளிட்டோர் ஏறிக் கொண்டனர். பலூன் நடுவானில் பறந்தபோது இருவரும் மாலை மாற்றித் திருமணம் செய்துகொண்டனர். அப்போது தரையில் மங்கள வாத்தியம் முழங்கியது.
வந்தனாவின் நெற்றியில் சுனில் வர்மா சிந்தூர் (குங்குமம்) இட்டார். பின்னர் கீழிருந்தவர்கள் கைகளைத் தட்டிவாழ்த்தினர். பின்னர் பலூன் தரையிறங்கியது.
லிம்கா சாதனைப் புத்தகத்தில் இந்தத் திருமணம் இடம் பெறும் மணமக்களும், அவர்களது குடும்பத்தினரும்மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications