அன்டார்டிகா சிகரம் மீது ஏறி ஆஸி. குழு சாதனை
Subscribe to Oneindia Tamil
கான்பெரா:ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நான்கு பேர் அடங்கிய குழுவினர், அன்டார்டிகாவின்உயரமான சிகரமான வின்ஸன் மாஸிப்பின் உச்சியை அடைந்து புதிய சாதனைபடைத்துள்ளனர்.
![]() |
பனிக் கண்டமான அன்டார்டிகாவின் உயரமான சிகரம் வின்ஸன் மாசிப். இதன்உச்சியை ஆஸ்திரேலிய நாட்டுக் குழு ஒன்று அடைந்துள்ளது. இந்த சிகரத்தின் உயரம்4892 மீட்டர் ஆகும்.
![]() |
எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய அனுபவம் கொண்ட டங்கன் செஸ்ஸல் என்பவரதுதலைமையில் இந்தக் குழுவினர் நேற்று வின்ஸன் சிகரத்தின் உச்சியை அடைந்தனர்.இதற்கு அவர்களுக்கு ஒரு மாதம் பிடித்தது.
![]() |
தங்களது பயணத்தின் நிறைவு குறித்து செஸ்ஸல் கூறுகையில், கிட்டத்தட்ட 300கிலோமீட்டர் தொலைவுக்கு நாங்கள் பனிக் கட்டிகளிடையே நடந்து வந்து மலைச்சிகரத்தை அடைந்துள்ளோம். மலை உச்சியின் மீது ஏறி நின்று நாங்கள் நடந்து வந்தபனிப் பாதையைப் பார்த்தது மிகப் பெரிய சாதனையாக இருந்தது.
![]() |
சிகரத்தின் உச்சியிலிருந்து 1100 கிலோமீட்டர் தொலைவிலான தென் துருவத்தைப்பார்த்தது மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. மிகவும் ரம்யமாக இருந்தது.
செஸ்ஸலுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மலையேற்றக் குழுவினரான பீட்டர் வீக்ஸ்,ராபர்ட் ஜேக்சன், ராபர்ட் நார்த் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
![]() |
இந்த சிகரத்தை அடைய 1200 மீட்டர் அளவுக்கு செங்குத்தாக ஏற வேண்டியிருந்தது.இந்த மலைப் பகுதியின் தட்பவெப்பம் -35 டிகிரி என்பது குறிப்பிடத்தக்கது.
அன்டார்டிகாவின் எல்ஸ்வொர்த் மலைப் பகுதியில் இந்த வின்ஸன் மாசிப் சிகரம்உள்ளது. தென் துருவத்திலிருந்து 1200 கிலோமீட்டர் தொலைவில் இந்த சிகரம்உள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்

















Click it and Unblock the Notifications