தமிழகத்தில் 22 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்:ராதாகிருஷ்ணன், ககன்தீபுக்கு முக்கிய பதவிகள்
சென்னை:சுனாமி பாதிப்பின்போது மிகச் சிறப்பாகப் பணியாற்றிய கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ககந்தீப் சிங் பேடி ஊரக வளர்ச்சித் துறை இயக்குனராகநியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக, கூண்டோடு இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ககந்தீப் சிங் பேடி அப்பதவியிலிருந்துமாற்றப்பட்டு, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை இப்பதவியை வகித்து வந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் நிதித்துறை கூடுதல்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேடியும், ராதாகிருஷ்ணனும் சுனாமி தாக்குதலின்போது முறையே கடலூர்,நாகப்பட்டனம் மாவட்ட ஆட்சித் தலைவர்களாக இருந்தவர்கள். நிவாரணப்பணிகளை மிகச் சிறப்பாக கையாண்டு சர்வதேச அளவில் பாராட்டை பெற்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் ராதாகிருஷ்ணனை அமைச்சர் ஸ்டாலினுக்கு உதவியாகஊரக வளர்ச்சித் துறை இயக்குனராக்கினார் முதல்வர் கருணாநிதி. இத்தனைக்கும்கருணாநிதிக்கு கொஞ்சமும் ஆகாத, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்குநெருக்கமாக மாஜி ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனின் உறவினர் தான்ராதாகிருஷ்ணன்.
ஆனால், அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் ராதாகிருஷ்ணனின் நேர்மை,திறமையை மதித்து அவருக்கு உள்ளாட்சித்துறை இயக்குனர் பதவி தரப்பட்டது.
ஆனால் பேடி தொடர்ந்து ஆட்சியராக இருந்து வந்தார். இந் நிலையில்ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் ஒரு படி உயர்வு கிடைத்துள்ளது. மிக சென்சிடிவானநிதித்துறையின் கூடுதல் செயலாளராக்கப்பட்டுள்ளார். அடுத்த பட்ஜெட்டுக்குமாநிலம் தயாராகி வரும் நிலையில் அவருக்கு இந்தப் பதவி தரப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
அடிப்படையில் ராதாகிருஷ்ணன் ஒரு டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல கடும் உழைப்புக்குப் பெயர் போன ககன்தீப் சிங் பேடி கடலூர் கலெக்டர்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளாட்சித்துறை இயக்குனராகியுள்ளார். இனிஸ்டாலினுடன் இணைந்து பணியாற்றுவார்.
கடலூர் மாவட்ட புதிய ஆட்சித் தலைவராக ராஜேந்திர ரத்னூ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா-சசிகலாவுக்கு மிக வேண்டப்பட்டவரான தமிழ் வளர்ச்சி மற்றும்அறநிலையத்துறைச் செயலாளர் கற்பூர சுந்தரபாண்டியன், மேலும் கொஞ்சம்முக்கியத்துவம் குறைந்த மறுவாழ்வு துறைச் சிறப்பு ஆணையராக தூக்கிஅடிக்கப்பட்டுள்ளார்.
அதே போல விஜயக்குமார் மீன்வளத்துறை இயக்குநர், ஜக்மோகன் சிங் ராஜுதோட்டக் கலைத்துறை ஆணையர், சோனை கால்நடை வளர்ப்புத் துறை ஆணையர்,ஹேமந்த் குமார் சின்ஹா சமூக பாதுகாப்புத் துறை ஆணையர், சந்திரபிரகாஷ் சிங்போக்குவரத்துத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications