ஜெ வருமான வரி வழக்கு-சுப்ரீம் கோர்ட் தடை
டெல்லி:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் மீது சென்னை எழும்பூர்பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வரும் வருமான வரி வழக்கு விசராணக்கு இடைக்காலத் தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவும், சசிகலாவும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாதது மற்றும் ஜெயா என்டர்பிரைசசஸ்நிறுவனத்தின் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாதது தொடர்பாக இருவர் மீதும் வருமான வரித்துறைசென்னை பொருளாதாரக் குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தொடர்ந்த மனுக்களைசென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. மேலும் வழக்கு விசாரணையை நடத்தலாம் எனவும்,ஜனவரி 29ம் தேதி நீதிமன்றத்தில் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இருவர் மீதும்குற்றங்களை பதிவு செய்ய போதிய முகாந்திரம் உள்ளது என்று நீதிபதி ராஜு அறிவித்தார். மேலும்ஜெயலலிதாவும், சசிகலாவும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்தமனுவை விசாரித்த நீதிபதி அகர்வால் தலைமையிலான பெஞ்ச், ஜெயலலிதா, சசிகலா மீதான வழக்குவிசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
முல்லை: சுப்ரீம் கோர்ட் அணுக கோரும் ஜெ
இதற்கிடையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி தனது சுயநலத்தை விட்டு விட்டுஉடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
அணையின் கைப் பிடிச்சுவரை கேரள காவல்துறையின் உதவியுடன் இடித்த செயல் கடும் கண்டனத்துக்குரியது.கைப்பிடிச் சுவர் இடிப்பு விஷயதில் கருணாநிதி அக்கறை காட்டியிருக்க வேண்டும்.
மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து அதற்கு மதிப்பு அளிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் ராணுவப் பாதுகாப்புவழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவும் நடைபெறவில்லை.
பிரதமர் தற்போது சென்னைக்கு வந்துள்ளார். அப்போது இதுகுறித்து வலியுறுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.அதுபற்றிய செய்திகளைப் பத்திரிக்கைகளில் தேடிப் பார்த்தேன். ஆனால் எந்தப் பத்திரிக்கையிலும், அவ்வாறுஒரு சிறு குறிப்பு கூட இல்லை.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் உயர்ந்தால் அணை உடையும். பல ஊர்கள் அடித்துச்செல்லப்படும், மக்கள் செத்து மடிவார்கள் என கிராபிக்ஸ துணையுடன் படு பயங்கரமான, பார்ப்போர் மனதைகுலை நடுங்கச் செய்யம் தொலைக்காட்சித் தொகுப்பினை தயாரித்து அதனை கேரள தொலைக்காட்சிகளில்வெளியிட்டு அங்குள்ள மக்களை உசுப்பி விடுகிறார்கள்.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு கேரள காவல்துறையினரிடம்தான் உள்ளது. அவர்களின்எண்ணிக்கையை கேரள அரசு பன் மடங்கு உயர்த்தி விட்டது. இவர்கள் அனைவரும் தமிழக அரசிடம்தான்சம்பளம் பெறுகிறார்கள். அப்படி இருந்தும் கைப்பிடிச் சுவர் உடைக்கப்பட்டிருக்கிறது. இது எப்படி நடக்கமுடியும். இன்று கைப்பிடிச் சுவர் உடைப்பு, நாளை அணை உடைப்பா?
மத்திய அரசு ராணுவப் பாதுகாப்பு கொடுக்கும் என்ற நம்பிக்கை இல்லை. முதல்வர் கருணாநிதி தனது குடும்பதொலைக்காட்சியின் (சன் டிவியின் மலையாள சேனல்கள்) வருமானம் குறித்தும், சுய லாபம் குறித்தும்சிந்திப்பதை விட்டு விட்டு, கம்யூனிஸ்டுகளை ஐஸ் வைக்கும் மனோபாவத்தை விட்டு விட்டு உடனடியாகஉச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications