அபாய கழிவுகளை தமிழகத்தில் வீசும் கேரளா
குமுளி:சாக்கடைக் கழிவுகள், ஆடு, மாடு இறைச்சிக் கழிவுகள், மலக் கழிவுகள் உள்ளிட்ட அபாயகரமான கழிவுகளைதமிழக பகுதியில் கொட்ட வந்த கேரள லாரிகளை தமிழக போலீஸார் தடுத்து நிறுத்தி கேரளாவுக்குத் திருப்பிஅனுப்பினர்.
தமிழக மக்களை அணை விவகாரத்தில் மட்டும் கேரளா சாகடிக்கவில்லை. அபாயகரமான கழிவுகளை கொண்டுவந்து தமிழகத்தில் கொட்டும் கொடூரத்தையும் பல காலமாக செய்து வருகிறது.
இத்தனை காலமாக கேரளாவின் இந்த கொடூர செயலை யாரும் கண்டிக்கவில்லை. கொச்சி மாநகராட்சிக்குட்பட்டகழிவுகள் பொள்ளாச்சி அருகே பல காலமாக கொட்டப்பட்டு வந்தன. ஆனால் இதை யாருமே கண்டித்துக்கேட்கவில்லை.
ஆனால் சமீப காலமாக பொள்ளாச்சி மற்றும் சுற்றுப் பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர்.இதைத் தொடர்ந்து இங்கு கழிவுகளைக் கொட்ட போலீஸார் அனுமதி மறுத்து லாரிகளைத் திருப்பி அனுப்பஆரம்பித்தனர்.
இதையடுத்து வேறு எங்கு கொட்டலாம் என பார்த்த கேரள மாநிலத்தினர், தேனி மாவட்டம் உத்தமபாளையம்அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் இவற்றைக் கொட்ட தீர்மானித்தனர். அதுவும் தமிழக பகுதி தான்.கேரளத்தில் கொட்டினால் அவர்களது உடல் நலனுக்கு கேடு வருமாம்.
2 நாட்களுக்கு முன்பு 7 லாரிகளில் இந்தக் கழிவுப் பொருட்களுடன் உத்தமபாளையம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிக்கு வந்தனர். உத்தமபாளையம், கம்பம் இடையே உள்ள மலைப் பகுதியில் இந்தக்கழிவுகளை கொட்ட நடவடிக்கை எடுத்தனர்.
ஒரு லாரிக் கழிவு முழுக்கக் கொட்டப்பட்டு விட்ட நிலையில், தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்துகழிவுகளைத் தமிழகத்திற்குள் கொட்டத் தடை விதித்து லாரிகளை திரும்பவும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பினர்.மேலும் கொட்டப்பட்ட குப்பைக் கழிவுகளையும் திரும்பி அள்ளிச் செல்லுமாறு கூறி அந்த லாரியை மட்டும்நிறுத்தி வைத்தனர்.
ஆனால் கேரள குப்பையோடு கிளம்பிய இந்த லாரிகளை மீண்டும் கேரளாவுக்குள் அனுமதிக்க அம் மாநிலசோதனைச் சாவடியில் உள்ள போலீஸார் மறுத்து விட்டனர். இந்தக் கழிவுகளை கேரளாவுக்குள் அனுமதித்தால்நோய்கள் பரவும் என்று போலீஸார் கூறி அவற்றை அனுமதிக்க மறுத்தனர். (அப்ப தமிழ்நாட்டில் நோய்பரவாதா?)
இதனால் 6 லாரிகளும் கேரளாவுக்குள் நுழைய முடியாமலும், தமிழகத்திள்குள் அனுமதிக்கப்படாமலும்சோதனைச் சாவடி அருகே தமிழக எல்லையில் விடிய விடிய நின்றன. இந்த லாரிகள் தமிழகத்திற்குள் நுழைந்துவிடாமல் தடுக்க தமிழக போலீஸார் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர்.
தண்ணீர் தர மாட்டார்கள். ஆனால், ஆடு, மாடு, கோழி, காய்கறி எல்லாம் தமிழகத்திலிருந்து வேண்டும், அந்தக்கழிவுகளையும் பத்திரமாக எடுத்து வந்து தமிழகத்திலேயே கொட்டி சீரழிய விடுவார்கள். என்ன நியாயமோஇது?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications