பொங்கல் பானை விலை கிடுகிடு உயர்வு!
சென்னை:தமிழர் திருநாளாம் பொங்கல் நெருங்கி வந்து கொண்டுள்ள நிலையில் பொங்கல்பானை மற்றும் சர்க்கரையின் விலை கிடுகிடுவெ உயர்ந்துள்ளது.
தமிழர் திருநாள் என போற்றப்படும் பொங்கல் பண்டிகைகைக்கு இன்னும் 2வாரங்களே உள்ளன. இந்த நிலையில் பொங்கல் பானை உற்பத்தி படு வேகமாகஇருக்கிறது. பானை விற்பனையும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கிவிட்டது.
கடந்த ஆண்டை விட பொங்கல் பானையின் இந்த ஆண்டு விலை படு சூடாகஉள்ளது. தரமான பெரியா பானையாக இருந்தால் அதன் விலை ரூ. 100 வரைஇருக்கிறது. பூச்சு அலங்காரத்துடன் கூடிய பானையாக இருந்தால் ரூ. 150 வரைவிலை வைத்துள்ளனர்.
கரும்புகளும் விற்பனைக்கு வர ஆரம்பித்து விட்டன. தலைநகர் சென்னையில்,கோயம்பேடு மார்க்கெட்டில் கரும்பு கட்டுக்கள் வந்து இறங்க ஆரம்பித்துள்ளன.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்பு விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
20 கரும்புகளைக் கொண்ட கரும்பு கட்டு அதிகபட்சம் ரூ. 130க்கு விற்கப்படுகிறது.கடந்த ஆண்டு இது 80 ரூபாயாக இருந்தது. இது கோயம்பேடு மார்க்கெட் நிலவரம்.இந்தக் கரும்பை சென்னைக்குள் கொண்டு வரும் செலவையும் சேர்த்தால் ரூ. 250 ஐஒரு கட்டு கரும்பு தாண்டும் எனத் தெரிகிறது.
அடுத்த முக்கியப் பொருளான வெல்லம் விலையும் அதிகமாகவே உள்ளதாக மக்கள்தெரிவிக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications