பின் லேடன் எங்கிருக்கிறார்?: முல்லா ஒமர்

Subscribe to Oneindia Tamil

பெஷாவர்:ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி தூக்கி எறியப்பட்ட பிறகு தலிபான் தலைவர் முல்லா ஒமரும், அல்-கொய்தாதலைவர் ஒசாமா பின் லேடனும், அவரது வலது கரமான அய்மான் அல்-சவாகிரியும் தலைமறைவாகவே இருந்துவருகின்றனர்.

மூவரும் ஒரே இடத்தில் பதுங்கியிருப்பதாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால், 2001ம் ஆண்டு அமெரிக்கப்படைகளின் தாக்குதலுக்குப் பின்னர் ஒசாமா பின் லேடனை நான் சந்திக்கவே இல்லை என முல்லா ஒமர்கூறியுள்ளார்.

இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தனது செய்தித் தொடர்பாளர் முகம்மத் ஹனீப் மூலமாகஅனுப்பியுள்ள இ-மெயில் மூலமாக அனுப்பியுள்ள பதிலில் முல்லா இவ்வாறு கூறியுள்ளார்.

ஹனீப் மூலமாக முல்லாவை பேட்டி கண்டுள்ளது ராய்ட்டர்ஸ். ஹனீப் மூலமாக அவருக்கு அனுப்பப்பட்டகேள்விகளுக்கு இ-மெயில் மூலம் பதில் அனுப்பியுள்ளார் ஒமர்.

அதில், நான் ஒசாமாவை பார்க்கவும் இல்லை. பார்க்க முயற்சிக்கவும் இல்லை. ஆனாலும் அவர் நலமுடன் வாழஇறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

1990ம் ஆண்டு ஆப்கானில் குடியேரிய பின் லேடன், ஒமரின் மகளை திருமணம் செய்து கொண்டதும், தலிபான்ஆட்சி நடக்க நிதியுதவி செய்து வந்ததும் நினைவுகூறத்தக்கது.

பின் லேடனைப் போலவே ஒமர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+