நீதிபதி மீது செருப்பை வீசிய கைதி
புதுச்சேரி:புதுச்சேரி அருகே முதலியார்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டகைதி, நீதிபதி மீது செருப்பை வீசினார்.
![]() |
முதலியார்பேட்டையைச் சேர்ந்தவர்கள் ரமேஷ், ஜெயக்குமார். இருவரும் கடைகாரர்களிடம் ரவுடித்தனம்செய்தது தொடர்பாக கடந்த 2001ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும்தலைமறைவாகி விட்டனர்.
ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவரையும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போலீஸார் கைதுசெய்தனர். முதலியார்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்த துவருகிறது.
நேற்று விசாரணைக்கு வழக்கு வந்தபோது அரசுத் தரப்பு சாட்சியான அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர்வெங்கடாசமி வரவில்லை. இதனால் நீதிபதி வைத்தியநாதன் வழக்கை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இதைக் கேட்டதும் ரமேஷும், ஜெயக்குமாரும் கோபமடைந்தனர். ரமேஷ் தான் போட்டிருந்த செருப்புகளைகழற்றி நீதிபதி மீது வீசினார். இதனால் அங்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
போலீஸார் உடனடியாக ரமேஷைப் பிடித்து வெளியே கொண்டு வந்தனர். நீதிபதி மீது கைதி செருப்பு வீசியதைக்கண்டித்து வக்கீல்கள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் போலீஸார் ரமேஷை சிறைக்குக் கொண்டு சென்றனர்.
போகும்போது தான் வைத்திருந்த ஒரு கடிதத்தை ரமேஷ் தூக்கி எறிந்து விட்டு போனார். அதில் சிறைஅதிகாரிகள் தன்னை மிரட்டுவதாகவும், நீண்ட நாட்களாக தன்னை சிறையில் வைத்திருப்பதாகவும்எழுதியிருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications