அம்மிக் கல்லால் பேரனை கொன்ற பாட்டி
கோவை:கோவையில் மகள் மீது ஏற்பட்ட கோபத்தில் தனது பேரனையே அம்மிக் கல்லால் அடித்துக் கொன்றார் கொடூரபாட்டி.
கவுண்டம்பாளையம் பாரி நகரைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவரது மனைவி ருக்மணி. இந்தத் தம்பதிக்குவனிதா, மைதிலி என இரு மகள்கள் உள்ளனர். வனிதா தனது கணவருடன் பெரியநாயக்கன்பாளையத்தைஅடுத்த வீரபாண்டியில் குடியிருக்கிறார்.
வனிதா தம்பதியின் மகன் ரஞ்சித், 6 மாதக் குழந்தை. நான்கு நாட்களுக்கு முன்பு தனது கணவர், குழந்தையுடன்தாய் வீட்டுக்கு வந்திருந்தார் வனிதா. அப்போது தனது தாயிடம், மைதிலியை மட்டும் நன்றாக படிக்க வைத்துஆசிரியை வேலை வாங்கிக் கொடுத்துள்ளீர்கள். என்னை மட்டும் கவனிக்காமல் விட்டு விட்டீர்களே என சண்டைபிடித்துள்ளார்.
இதைக் கேட்டதும் ருக்மணி ஆத்திரமடைந்தார். தாய்க்கும், மகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சிக்குச் சென்ற ருக்மணி, பேரன் ரஞ்சித் மீது தனது கோபத்தைத் திருப்பினார்.
வீட்டில் கிடந்த அம்மிக் கல்லை எடுத்து ரஞ்சித்தின் தலையில் பலமாக அடித்தார். இதில் தூங்கிக் கொண்டிருந்தஅந்த அப்பாவிக் குழந்தை துடிதுடித்து இறந்து போனான்.
குழந்தையை தாயிடமிருந்து காப்பாற்ற வனிதா முயன்றபோது அவரை கத்தியை எடுத்துக் குத்தினார் ருக்மணி.இதில் வனிதாவுக்கும் காயம் ஏற்பட்டது.
வனிதா போட்ட அலறலைக் கேட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள்வீட்டுக் கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார் ருக்மணி.ஆனால் அனைவரும் உள்ளே புகுந்து ருக்மணியை மீட்டனர்.
துடியலூர் போலீஸார் விரைந்து வந்து குழந்தையின் உடலை மருத்துவமனைக்கு பிரரேதப் ப>சோதனைக்காகஅனுப்பி வைத்தனர். வனிதா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பேரனைக் கொடூரமாககொன்ற பாட்டி ருக்மணி கைது செய்யப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications