ஆட்டோ கட்டணம் அதிரடி உயர்வு-மினிமம் ரூ.14
சென்னை:தமிழகத்தில் ஆட்டோரிக்ஷாக்களின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 14 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் ஏற்கனவே ராக்கெட் உயரத்தில் இருந்து வருகிறது.குறைந்தபட்ச கட்டணமாக அரசு நிர்ணயித்த தொகை ரூ. 7தான். ஆனால் சென்னைமுதல் கன்னியாகுமரி வரை எங்குமே இந்தக் கட்டணத்திற்கு ஆட்டோக்கள்வருவதில்லை.
குறைந்தபட்சத் தொகையாக ரூ. 15 முதல் 25 வரை அவர்களாகவே ஒரு கட்டணத்தைநிர்ணயித்துக் கொண்டு வசூல்ராஜாக்களாக மாறி மக்களை வறுத்தெடுத்து வந்தார்கள்.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி ஆட்டோகட்டணத்தை உயர்த்த வேண்டும் என தமிழகம் முழுவதும் ஆட்டோ ரிக்ஷாடிரைவர்கள், உரிமையாளர்கள் அரசைக் கோரி வந்தனர்.
தற்போது ஆட்டோக்களுக்கான கட்டண விகிதத்தை தமிழக அரசு மாற்றிஅமைத்துள்ளது. குறைந்தபட்சக் கட்டணத்தை ரூ. 7லிருந்து ரூ. 14 ஆகஉயர்த்தியுள்ளது.
புதிய ஆட்டோ கட்டண விகிதம்:
முதல் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ. 14 கட்டணமாக வசூலிக்கப்படும்.அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ. 6 அதிகம் வசூலிக்கப்படும் (இது தற்போதுரூ. 3.50 ஆக உள்ளது).
இதேபோல காத்திருப்புக் கட்டணம் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் 40 பைசாவாகஇருக்கும். இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான நேரத்தில்பயணிப்போரிடம் திருத்தப்பட்ட கட்டணத்தில் கூடுதலாக 25 சதவீதம்வசூலிக்கப்படும்.
ஆட்டோ உரிமையாளர்கள், தங்களது ஆட்டோக்களில் தற்போது பொருத்தியுள்ளமீட்டர்களை அகற்றி விட்டு இன்னும் 6 மாதங்களுக்குள் மின்னணு மீட்டர்களைப்பொருத்த வேண்டும். ஏற்கனவே மின்னணு மீட்டர்களை பொருத்தியுள்ளவர்கள் 45நாட்களுக்குள் திருத்தப்பட்ட கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும்.
மின்னணு மீட்டர்களை பொருத்துவது மற்றும் மாற்றுவதற்காக ஆட்டோஉரிமையாளர்களுக்கு அரசு ரூ. 2000 நிதியுதவியை வங்கிகள் மூலம் அளிக்கும்.
புதிய கட்டண விகிதம் ஜனவரி 26ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஆட்டோ கட்டணம், மீட்டர் முறைகேடு தொடர்பாக பொதுமக்கள் புகார் கொடுக்க சிலதொலைபேசி எண்களையும் அரசு அறிவித்துள்ளது.
அந்த எண்கள்: 103, 044-26445511, 044-26444445, 044-26445959.
எஸ்.எம்.எஸ். மூலம் புகார் கூற: 9841808123.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications