ஷேவாக், பதான், லட்சுமன் அவுட்-கங்குலி இன்
ராஜ்கோட்:மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் முதல் இரு ஆட்டங்களுக்கான இந்தியஅணியில் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலிக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. வீரேந்திர ஷேவாக், இர்பான்பதான், வி.வி.எஸ்.லட்சுமண், முகம்மது கைப் ஆகியோருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்டஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு ராஜ்கோட்டில் இன்று நடந்தது.
தேர்வுக் குழுத் தலைவர் வெங்சர்க்கார் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் முதல் இரண்டுபோட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதில் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார்.இதேபோல உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியின் தகுதிக் குழுவிலும் கங்குலி இடம்பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடி அதிக ரன்களைக் குவித்து தனது திறமையைநிரூபித்ததற்காக கங்குலிக்கு மீண்டும் ஒரு நாள் தொடருக்கான அணியில் இடம் கிடைத்துள்ளது.
இந்திய அணியின் துணை கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அணில் கும்ப்ளேவுக்கு முதல்இரண்டு போட்டிகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டள்ளது. மீதம் உள்ள இரண்டு போட்டிகளில் அவர்விளையாடுவார் என வெங் சர்க்கார் தெரிவித்தார்.
தொடர்ந்து சொதப்பலாக ஆடி வரும் வீரேந்திர ஷேவாக் ஒரு வழியாக தூக்கப்பட்டுள்ளார். அவரோடு சேர்த்துஇர்பான் பதான், முகம்மது கைப், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோரும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி வீரர்கள் விவரம்:
ராகுல் டிராவிட் (கேப்டன்), ராபின் உத்தப்பா, சச்சின் டெண்டுல்கர் (துணை கேப்டன்), செளரவ் கங்குலி, சுரேஷ்ரெய்னா, எம்.எஸ்.டோணி, திணேஷ் கார்த்திக், கெளதம் காம்பிர், ஜாகிர் கான், ரமேஷ் பவார், ஸ்ரீசாந்த், ஹர்பஜன்சிங், ஜோகிந்தர் சர்மா, அஜீத் அகர்கர், ஆர்.பி.சிங்.
30 பேர் கொண்ட உலகக் கோப்பை தகுதி அணி:
ராகுல் டிராவிட், ராபின் உத்தப்பா, சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, ஷேவாக், லட்சுமண், முகம்மது கைப்,சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், டோணி, திணேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல், அணில் கும்ப்ளே, கெளதம்காம்பிர், ஜாகிர் கான், ரமேஷ் பவார், ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், ஜோகிந்தர் சர்மா, அஜீத் அகர்கர், ஆர்.பி.சிங்,வி.ஆர்.வி. சிங், முனாப் படேல், இர்பான் பதான், ரோகித் சர்மா, பத்ரிநாத், சேடேஸ்வர் புஜாரா, திணேஷ்மோங்கியா, இஷாந்த் சர்மா, ராஜேஷ் பவார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications