இளங்கோவன் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா!
பெங்களூரு:பெங்களூரில் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்ட கூட்டத்தில்பட்டு உற்பத்தியாளர்கள் திடீர் தர்ணாவில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டுத் தொழில் வளர்ச்சிக்காக தற்போது உள்ள சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. இதற்கு பட்டு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் புதிய சட்டத்திருத்தத்தால் விவசாயிகளுக்குஎந்தப் பாதிப்பும் இல்லை என்று மத்திய பட்டு வாரியம் பிரசாரம் செய்து வருகிறது.
இந்த நிலையில், அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பெங்களூரில் பட்டு விவசாயிகளை சந்தித்துஇதுதொடர்பாக விளக்கம் அளித்து பேச கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் இளங்கோவன், மாநில அமைச்சர் ராமச்சந்திர கெளடா, பெங்களூரு எம்.பி. தேஜஸ்வினிஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டு விவசாயிகளும், பட்டு நெசவாளர்கள், பட்டு நூல் பிரிப்பவர்கள்திரளாக வந்திருந்தனர்.
அப்போது ஒரு குறிப்பிட்ட விவசாய சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் அங்கு வந்து, தங்களை கூட்டத்திற்குஅழைக்காததைக் கண்டித்து கோஷமிட்டனர். ஒரு விவசாயி மேடையில் ஏறி படுத்துக் கொண்டு போராட்டம்நடத்தினார்.
பெண் எம்.பி. தேஜஸ்வினியை சுற்றி நின்று கொண்டு தர்ணா செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.விவசாயிகள் போராட்டம் காரணமாக இளங்கோவன் தனது நிகழ்ச்சிகளை பாதியில் ரத்து செய்து விட்டுஅங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
முன்னதாக இளங்கோவன் விவசாயிகளிடையே பேசுகையில், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தசெயலையும் எங்களது துறை செய்யாது. மைசூர் பட்டு விவசாயிகள் புதிய சட்டத்தால் பாதிப்படைவர்கள் எனநினைத்தால் அதை மாற்றி அமைக்க மாநில அரசுடன் பேச்சு நடத்தி அவர்களுக்கு உரிய அதிகாரம் வழங்கநடவடிக்கை எடுக்கப்படும்.
பட்டு கூடு விவசாயிகளையும், பட்டுக்கூடு சந்தையையும் இந்த சட்டம் எந்தவிதத்திலும் பாதிக்காது, பாதிக்க விடமாட்டோம் என்பதை மீண்டும் மீண்டும் உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்.
அதேபோல இந்த சட்டத்தில் செய்யப்படும் மாற்றங்களின்போது கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்கம்போன்ற பட்டு உற்பத்தியில் ஈடுபடும் மாநிலங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications