இட ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆபத்து: ராமதாஸ்
69 சதவீத இட ஒதுக்கீடு உள்பட 9வது அட்டவணையில் உள்ள சட்டங்களை மறு ஆய்வு செய்யநீதிமன்றங்களுக்கு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்துள்ளதன் மூலம் மக்கள் நல சட்டங்களுக்கு ஆபத்துஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச்சின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அடிப்படை உரிமைபாதிக்கப்பட்டதாக யார் கருதினாலும், 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டங்களை எல்லாம் எதிர்த்துநீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தலாம் என்கிற ஆபத்தான நிலைஉருவாகியுள்ளது.
இதன் மூலம் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டதன் நோக்கமும், அதன் நிலைத்தன்மையும் சீர்குலைந்து விடும்என்பதில் சந்தேகம் இல்லை. தனி மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
ஆனால் நாட்டின் நலன், பாதுகாப்பு, இறையாண்மை, இவை எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் நலன்ஆகியவற்றை விட தனி மனித உரிமையே மேலானது என்பதற்கு இந்த தீர்ப்பு வழி வகுத்துள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிராக ஒரு சட்டம் இயற்றப்பட்டு அதை 9வது அட்டவணையில் சேர்த்தாலும் , அது தனி மனிதஉரிமையை பாதிப்பதாக உள்ளது என்று ஒரு தீவிரவாதி அந்தச் சட்டத்தையும் எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்லமுடியும்.
ஜனநாயகத்தில் மக்களின் நலன்தான் முக்கியம். மக்களின் நலனைப் பார்க்காமல் தனி மனித உரிமையைநோக்கமாகக் கொண்டு ஆய்வு செய்யத் தொடங்கினால் மக்கள் நலச் சட்டங்கள் எதையும் நிறைவேற்றமுடியாமல் போய் விடும்.
சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும் அதன் தனித் தன்மையை இழந்து விடும். இது ஜனநாயகத்திற்கேபேராபத்தை விளைவித்து விடும்.
எனவே மத்திய அரசு, மாநில அரசுகள் உடனடியாக செயல்பட்டு இந்த ஆபத்தை தவிர்ப்பது எப்படி என்றுஆராய வேண்டும். அதற்கான வழிமுறையை பிரதமரும், அவருக்குத் துணையாக நமது முதல் அமைச்சர்கருணாநிதியும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
முதல்வர்கள் மாநாட்டைக் கூட்டி விவாதிப்பதுடன் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்துக்களையும்ஆதரவையும் பெற்று இச்சிக்கலைத் தவிர்க்க பிரதமர் அவசரமாகச் செயல்பட வேண்டும்.
முதல்வரும் அனைத்துக் கட்சிக் கூட்டததைக் கூட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications