அவதூறு வழக்கில் வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னை:தமிழக அமைச்சர்களும், திமுக மாவட்டச் செயலர்களும் லட்சக்கணக்கில் ரூபாய்நோட்டுக்களை வைத்துக் கொண்டு மதிமுகவில் ஆள் பிடிக்கும் வேலையாகஅலைகின்றனர் என வைகோ கூறியுள்ளார்.
சென்னை அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூவில் நடந்த பொதுக்குழு விளக்கபொதுக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில்,
தென் மாவட்டத்தில் கோடிக்கணக்கான மக்களின் உயிர் ஆதாரமான முல்லைபெரியாறு அணை பிரச்னையில் நடை பயணம் மேற்கொண்டேன். அப்போது, மதிமுகநடத்த இருந்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்க இரவோடு இரவாக உயர்நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர்.
நான் நீதித் துறையையும், நீதிபதிகளையும் மதிக்கிறேன். தடை விதிக்க சென்றவர்களில்திமுக வக்கீல்களும் இருந்தனர்.
ஒரு முதல்வர், அரசியல் கட்சியின் தலைவர், ரூ. 30 கோடி இருந்தால்வைகோவையே விலைக்கு வாங்கி விடுவேன் என்று பேசுகிறார். என்ன அதிகாரம்?என்ன ஆணவம்?.
தமிழக அமைச்சர்களும், திமுக மாவட்டச் செயலர்களும் லட்சக்கணக்கில் ரூபாய்நோட்டுக்களை வைத்துக் கொண்டு ஆள் பிடிக்கும் வேலையில் அலைகின்றனர்.
மதிமுக என்னும் கப்பலில் ஓட்டை விழுந்து விட்டது என்று கருணாநிதி, கணேசனைதூண்டி விட்டு நச்சு பிரசாரம் செய்து வருகிறார். அப்படியே ஓட்டை விழுந்தாலும்அனைவரையும் கரையேற்றி விட்டு சந்தோஷமாக ஓட்டை விழுந்த கப்பலோடு இந்தமாலுமி செல்லத் தயார்.
மதிமுக எழுச்சி பெற்ற இயக்கம். யாராலும் எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. இதுதியாகத்தில் உருவான கட்சி. அவர்கள் இரண்டு பேரையும் நீக்கியதிலும் நன்மை தான்கிடைத்துள்ளது.
திமுக வலையில் விழுந்தவர்கள் அவர்களிடம் பலியாகி விட்டனர், பாவம். என்றாவதுஒரு நாள் அவர்கள் இருவரும் பாவமன்னிப்பு கேட்டு திரும்பி வருவார்கள் என்பதுமட்டும் நிச்சயம் என்றார் வைகோ.
வைகோ கோர்ட்டில் ஆஜர்
இதற்கிடையில் திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் எழும்பூர் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் வைகோஆஜரானார்.
மதிமுகவை உடைக்க முதல்வர் கருணாநிதியும், திமுகவும் முயற்சிகள் செய்து வருவதாகவும், சதித் திட்டம்தீட்டியுள்ளதாகவும் வைகே குற்றம் சாட்டி பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து முதல்வரை அவதூறாகப்பேசியதாக கூறிவைகோ மீதும், பேட்டியை பிரசுரித்த இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் மீதும்திமுகபொருளாளர் ஆற்காடு வீராசாமி சென்னை எழும்பூர் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் அவதூறு வழக்கதொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று நேரில் ஆஜாரிக விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி பூதநாதன் உத்தரவிட்டிருந்தார்.அதன்படிஇன்று வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடன் பெரும் திரளான மதிமுகவினரும் கோர்ட்டுக்கு வந்தனர்.
அப்போது ஆற்காடு வீராசாமி கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர் ஏன் வரவில்லை என்று வீராசாமியின்வழக்கறிஞரிடம் நீதிபதி வினவினார். அதன் பின்னர் புகார் மனுவின் நகல் வைகோவுக்கு அளிக்கப்பட்டது.இதையடுத்துவிசாரணையை 22ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்று மீண்டும் வைகோ உள்ளிட்டோர் நேரில் ஆஜராகவேண்டும் எனஉத்தரவிட்டார்.
பின்னர் வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், கருணாநிதியின் சதித் திட்டத்தையும்,மதிமுகவைஅழிக்க அவர் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தவும் இது எனக்கு நல்ல வாய்ப்பு. இந்த வழக்கைநான்சட்டப்பூர்வமாக சந்திப்பேன்.
மதிமுகவுக்குள் குழப்பத்தை விளைவித்து அதை உடைக்க முயன்ற கருணாநிதியின் முயற்சிகள் தோற்றுப்போயுள்ளன.கருணாநிதியின் முயற்சிகள் மதிமுக தொண்டர்களை மேலும் உறுதியாக்க உதவியுள்ளது.
எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் கட்சிப் பொறுப்புகளிலிருந்துதான் நீக்கப்பட்டுள்ளனர். உறுப்பினர்பொறுப்பிலிருந்து அவர்கள் நீக்கப்படவில்லை. எனவே நடந்து கொண்டதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டால்அவர்கள்இருவரும் தொடர்ந்து மதிமுகவில் செயல்படலாம்.
எனக்கு அவர்கள் மீது எந்த கோபமும் இல்லை. கருணாநிதியின் திட்டங்களுக்கு அவர்கள் இரையாகியுள்ளனர்.எனவேஅவர்களை நான் பெரிதாக கருதவில்லை என்றார் வைகோ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications