திருச்சி-மங்களூர் ரயில் ரத்து: மக்கள் கொந்தளிப்பு
திருச்சி:திருச்சி, மங்களூர் இடையிலான ரயில் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து பல்வேறு சேவை நிறுவனங்களின்கூட்டமைப்பு சார்பில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதுகுறித்து இந்த கூட்டமைப்பின் தலைவர் சேகரன் கூறுகையில், திருச்சி, மங்களூர் இடையிலான ரயில்நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பொதுமக்கள், வேலைக்குச் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இந்த ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருச்சியை தொடர்ந்து ரயில்வே துறை புறக்கணித்து வருகிறது.
சென்னை-திருச்சி இடையிலான மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை கும்பகோணம் வரை நீட்டித்தனர். பின்னர்மயிலாடுதுரை வரை நீட்டித்தனர். இதன் மூலம் சென்னையிலிருந்து திருச்சிக்கென தனி ரயில் இல்லாத நிலைஏற்பட்டுள்ளது.
இப்போது திருச்சி, மங்களூர் இடையிலான ரயிலையும் ரத்து செய்து விட்டனர். இதன் மூலம் திருச்சி மீது ரயில்வேஅதிகாரிகள் பாரபட்சம் காட்டுவது தெளிவாகியுள்ளது.
திருச்சி, கோட்ட தலைமையிடமாக இருந்தும், திருச்சியிலிருந்து ஒரு ரயில் கூட எங்கும் இயக்கப்படாத அவலநிலை நிலவுகிறது. இதை எதிர்த்தும், ரயில்வே அதிகாரிகளைக் கண்டித்தும் தொடர்ந்து போராட்டம் நடத்தத்திட்டமிட்டுள்ளோம் என்றார் சேகரன்.
போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இதனால் திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார்அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
நல்ல லாபத்தில் ஓடிக் கொண்டிருந்த திருச்சி-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலை சமீபத்தில் நிறுத்திய தெற்கு ரயில்வே,அதற்குப் பதில் சென்னை-கோவை இடையிலான ரயிலை மங்களூர் வரை நீட்டித்தது.
திருச்சி-மங்களூர் ரயிலில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள்தான் அதிக அளவில் பயணித்து வந்தனர்.மேலும் கரூர், திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஜவுளி நிறுவனங்கள், பின்னலாடை நிறுவனங்களில்பணியாற்றுவோர், வியாபாரிகள், மாணவர்களும் இந்த ரயிலையே நம்பியிருந்தனர்.
ஆனால் ரயில்வே துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் அனைத்துத் தரப்பினரும் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications