இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு:பாலமேட்டில் 100 பேர் காயம்!
மதுரை:மதுரை அருகே அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு இன்றுநடக்கிறது.
பாலமேடு கிராமத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளைகளைப் பிடிக்கமுயன்ற 100 பேர் காயமடைந்தனர்.
![]() |
பொங்கல் திருநாளையொட்டி மதுரையைச் சுற்றிலும் உள்ள கிராமங்களில்ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் களை கட்டியுள்ளன. முதலில் அவனியாபுரத்தில்ஜல்லிக்கட்டு நடந்தது. நேற்று பாலமேட்டில் நடந்தது. இந்த கிராமம் அலங்காநல்லூர்அருகே தான் அமைந்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து,பார்வையாளர்களும், போட்டியாளர்களும் தனித் தனியாக பிரிக்கும் வகையில்,தடுப்புகள் அமைக்கப்பட்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.
![]() |
ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டு வந்து ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர்.அனைவரும் கட்டைத் தடுப்புகளுளை மீறி வராமல் அமைதியான முறையில் நின்றுஆர்ப்பாட்டமாக ஜல்லிக்கட்டை ரசித்தனர்.
முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இவற்றை யாரும்பிடிக்கவில்லை. அடுத்து பிற ஊர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றைப்பிடிக்க இளம் வாலிபர்கள் முண்டியடித்தனர். பல காளையர்கள், காளைகளை படுதுணிச்சலாக களமிறங்கி வெற்றி பெற்றனர். பலரை காளைகள் தூக்கி தூர வீசி விட்டுதிமிருடன் உலா வந்தன.
![]() |
200க்கும் மேற்பட்ட காளையர்களும், 500க்கும் மேற்பட்ட காளைகளும் போட்டியில்கலந்து கொண்டன. காளைகளை துணிச்சலுடன் அடக்கி வெற்றி பெற்றவாலிபர்களுக்கு வேட்டி துண்டு முதல் தங்க மோதிரம், சங்கிலி, கட்டில், பீரோ வரைபல தரப்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
யாராலும் அடக்க முடியாத பல முரட்டுக் காளைகளின் சொந்தக்காரர்களுக்கும்பரிசுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.
மாடுகள் முட்டியதில் 100 பேர் காயமடைந்தனர். அதில் படுகாயமடைந்த 11 பேர்மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாடு பிடிக்க வந்த போட்டியாளர்கள் மது அருந்தியுள்ளார்களா என்பதை டாக்டர்கள்மூலம் அறிந்த பின்னரே அவர்கள் களத்தில் இறக்கி விடப்பட்டனர். இதேபோலபோட்டியில் கலந்து கொண்ட காளைகளுக்கு மது கொடுக்கப்பட்டுள்ளதாஎன்பதையும் சோதனை செய்த பின்னரே போட்டியில் இறக்கி விடப்பட்டன.
முன்னதாக உயர்நீதிமன்ற நீதிபதி பத்மநாபன், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கானஏற்பாடுகளைப் பார்வையிட்டார்.
அலங்காநல்லூ>ல் இன்று...
இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதற்காக விசேஷஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கலந்து கொள்ளும் காளைகளின் பெயர்கள்முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டுள்ளன.
200க்கும் மேற்பட்ட வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 600க்கும்மேற்பட்ட காளை மாடுகள் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளன.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50,000 மேற்பட்டோர் ஜல்லிக்கட்டைக் காணவருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திரளான வெளிநாட்ட்டவரும் வருகைதரவுள்ளனர். இதனால் மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!















Click it and Unblock the Notifications