ஆளுநர் உரையும், இட்லி மாவும்-ஜெ கிண்டல்
சென்னை:இட்லி மாவை மேலும் மேலும் அரைத்தால் என்னாகும்?. துணியுடன் இட்லி ஒட்டிக்கொள்ளும். அதுபோலத்தான் ஆளுநர் உரையிலும் அரைத்த மாவையேஅரைத்துள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் ஆற்றிய உரை குறித்து ஜெயலலிதாவெளியிட்டுள்ள கருத்து:
அரைத்த மாவையே அரைத்துள்ளனர். இட்லி மாவை மேலும் மேலும் அரைத்தால்என்ன ஆகும் என்பது பெண்களுக்குத் தெரியும். இட்லி வார்க்கவே முடியாது.துணியுடன் ஒட்டிக் கொள்ளும். இதுதான் நடந்திருக்கிறது.
விவசாயிகள் நல வாரியம் அமைக்கப் போகிறார்களாம். இதன் மூலம் 66 லட்சம்பேருக்கு சலுகைகள் அளிக்கப் போவதாக கண் துடைப்பு அறிவிப்பு செய்துள்ளனர்.நாங்கள் கொண்டு வந்த திட்டத்தில் 1 கோடியை 99 லட்சம் விவசாயிகள் பலன்பெற்றனர். ஆனால் அதை சிறுபான்மை கருணாநிதி அரசு 66 லட்சமாக சுருக்கிவிட்டது.
படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் மூலம்வேலை கேட்டுப் பதிவு செய்த 50 லட்சம் பேருக்கும் பலன் உண்டாகப் போவதாககூறியுள்ளனர். ஆனால் அவர்களே இத்திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 50 ஆயிரம்இளைஞர்களுக்குத்தான் உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவேஇதுவும் ஒரு கண்துடைப்பு, ஏமாற்று வேலை.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை ஆட்சிக்கு வந்து 8 மாதங்களாகியும் இன்னும்இந்த அரசு செயல்படுத்தவில்லை.
ரேஷன் கடையில் வழங்கப்படும் 2 ரூபாய்க்கு வழங்கப்படும் அரிசி மோசமானதாகஇருக்கிறது. அதேபோல இலவச கலர் டிவி திட்டமும் ஒரு கண் துடைப்பு.
விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்தோம் என்றார்கள். ஆனால் புதுக் கடன்வழங்கப்படவே இல்லை. காரணம் கூட்டுறவு வங்கிகளிடம் பண்மே இல்லை.அவர்களுக்கு அரசு நிதியும் தரவில்லை.
இந்த ஆளுநர் உரையில் புதிதாக எதுவும் இல்லை. பல பொய்களைச் சொல்லிதொடர்ந்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். ஆனால் இனியும் ஏமாற மக்கள்தயாராக இல்லை.
இந்த உரையை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிவதோடு, சிறுபான்மை திமுகஅரசையும் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications