சங்கிலி திருடனிடம் மாட்டிய விதவை-புகார் வாங்காமல் இழுத்தடித்த போலீஸ்!
சென்னை:புகார் கொடுக்க இளம் விதவைப் பெண்ணிடம் புகார் மனுவை வாங்காமல் நள்ளிரவுவரை இழுத்தடித்து சென்னை ஆதம்பாக்கம் போலீஸார் தங்களது பொறுப்பைகாட்டினர்.
சென்னை புறநகரான ஆதம்பாக்கம் புவனேஸ்வரி நகரில் வசிப்பவர் சுமதி. 26வயதான சுமதியின் கணவர் லட்சுமணன் சமீபத்தில் விபத்தில் மரணமடைந்தார்.
சுமதி, தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவுபணி முடிந்து பத்து மணியளவில் தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணிந்து வந்த ஒரு நபர், சுமதியின்கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி, ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்குப் புகார்கொடுக்கச் சென்றார். அதற்கு போலீஸார் காலையில் வந்து புகார் கொடுங்க என்றுஅலட்சியமாக கூறியுள்ளனர். ஆனால் புகாரை வாங்காமல் நான் வீட்டுக்குச் செல்லமாட்டேன் என சுமதி கூறியுள்ளார்.
இதையடுத்து புகார் மனுவை வாங்காமல் சம்பவம் நடந்த இடத்திற்குச் கூட்டிச் சென்றுவிசாரணை நடத்திய போலீஸார் மீண்டும் காவல் நிலையத்திற்குக் கூட்டி வந்தனர்.பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே இடத்திற்குக் கூட்டிச் சென்றனர்.
இப்படியே நள்ளிரவு வரை அங்கும் இங்குமாக சுமதியை அலைக்கழித்துள்ளனர்.இதனால் விரக்தியுற்ற சுமதி, சம்பந்தப்பட்ட 15வது வார்டு கவுன்சிலர் ரமேஷிடம்சென்று புகார் கொடுத்தார்.
விரைந்து வந்த ரமேஷ், போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுக்க வந்த பெண்ணைஇப்படியா அலைக்கழிப்பது என போலீஸாருடன் வாக்குவாதகம் செய்தார். அதன்பிறகு ஒரு வழியாக புகார் மனுவைப் பெற்றனர் போலீஸார்.
சில மாதங்களுக்கு முன்பு இதே காவல் நிலையத்தில்தான், லஞ்சப் பணத்தை யார்வாங்குவது என்பதில் ஏற்பட்ட தகராறில் இரு போலீஸார் கட்டிப்புரண்டு தெருவில்சண்டை போட்டு ஆதம்பாக்கமே நாறியது.
இதைத் தொடர்ந்து இந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றிய அத்தனை போலீஸாரும்கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications