கருணாநிதி வீட்டில் சாய் பாபா!!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:கிருஷ்ணா நதி நீர்த் திட்டத்திற்கு ரூ. 200 கோடி செலவில் கால்வாய் அமைத்துக் கொடுத்ததற்காக புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவைப் பாராட்டி இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் விழா நடந்தது.

கிருஷ்ணா நதி நீர்த் திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்தின் பூண்டி நீர்த் தேக்கம் வரையிலானகால்வாயை மராமத்து செய்து, புதுப்பித்து அமைக்கும் பணியை சத்ய சாய் அறக்கட்டளை ஏற்றுக் கொண்டது.

Karunanidhi with Saibaba

இதைத் தொடர்ந்து ரூ. 200 கோடி செலவில் இந்த கால்வாய் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னைமக்களின் சார்பில் சாய்பாபாவுக்கு இன்று சென்னையில் பாராட்டு விழா எடுக்கப்பட்டது. நேரு உள் விளையாட்டுஅரங்கில் இன்று நடந்த விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

தமிழக ஆளுநர் பர்னாலா, மகாராஷ்டிர மாநில ஆளுநர் எஸ்.எம்.கிருஷ்ணா, மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ்தேஷ்முக், கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஆந்திர முதல்வர் சார்பில் அம்மாநில அமைச்சர்கள் இருவர், மத்தியஅமைச்சர்கள் சிவராஜ் பாட்டீல், லாலு பிரசாத் யாதவ், தயாநிதி மாறன், தமிழக அமைச்சர்கள் ஸ்டாலின்,துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று முதல்வர் கருணாநிதியை, சாய் பாபா அவரது வீட்டுக்குச் சென்றுசந்தித்து முக்கால் மணி நேரம் பேசினார்.

10 ஆண்டுகளுக்குப் பின்கு சாய்பாபா சென்னைக்கு வந்துள்ளார். சென்னையில் 30ம்தேதி வரை நடைபெறும் அதிருத்ர மகா யாகத்தை அவர் நேற்று தொடங்கி வைத்தார்.

இந் நிலையில் நேற்று மாலை முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம்வீட்டுக்குச் சென்று சாய் பாபா சந்தித்தார். வழக்கமாக சாய் பாபாவைத்தான்அனைவரும் சென்று சந்திப்பார்கள்.

ஆனால் முதல் முறையாக சாய் பாபாவே, முதல்வர் கருணாநிதியை அவரதுஇல்லத்தில் சந்தித்தார். மாலை 4.25 மணிக்கு சாய்பாபா கருணாநிதி வீட்டுக்கு வந்தார்.அவரை அமைச்சர்கள் துரைமுருகன், பெரியகருப்பன் ஆகியோர் பூச்செண்டுகொடுத்து வரவேற்றனர்.

பின்னர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சாய் பாபா கருணாநிதி வீட்டுக்குள்அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் வீட்டுக்குள் இருந்த லிப்ட் மூலம் முதல்தளத்திற்கு சாய் பாபா சென்றார். அங்கு அவரை முதல்வர் கருணாநிதி வரவேற்றார்.

அவருடன் மனைவி தயாளு அம்மாள், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்,கருணாநிதியின் சகோதரி ஆகியோர் சாய்பாபாவை வரவேற்றனர்.

பின்னர் கருணாநிதியுடன் சுமார் முக்கால் மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார் சாய்பாபா. அவரிடம் தான் எழுதிய குறளோவியம், தாய் காவியம் ஆகியவற்றின்ஆங்கிலப் பதிப்புகளை கருணாநிதி வழங்கினார்.

முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் சாய்பாபாவின் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற்றார். அதன் பின்னர் சாய்பாபா விடைபெற்றுச் சென்றார். அவரை வீட்டின் வாசல்வரை வந்து கருணநிதி வழியனுப்பி வைத்தார்.

சாய் பாபா வந்த தகவல் பரவியதும் அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டு விட்டனர்.சாய்பாபா காரில் ஏறப்போகும் போது அவரது காலைத் தொட்டு வணங்கினர்.அனைவருக்கும் பாபா ஆசி வழங்கி விடைபெற்றார்.

பேசியது என்ன?

சாய் பாபா சென்ற பின்னர் அவருடன் என்ன பேசினீர்கள் என்று செய்தியாளர்கள் கருணாநிதியிடம்கேட்டபோது, தமிழ் பேசினேன். அவர் நன்றாகவே தமிழ் பேசுகிறார். நான் ஆன்மீகம் பேசவில்லை, அவரும்அரசியல் பேசவில்லை.

சென்னை மக்களுக்கு குடி நீர் பிரச்சனையை தீர்க்கும் கிருஷ்ணா நதி நீர்த் திட்டத்தை நிறைவேற்ற உதவிய சாய்பாபாவுக்கு நன்றி தெரிவித்தேன். தமிழகத்தின் மேலும் பல நல்ல திட்டங்களுக்கும் உதவ வேண்டும் என்றுஅவரிடம் கோரிக்கை வைத்தேன் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+