கேப்டன் மண்டபம்: பாலுவுக்கு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தைகையகப்படுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர்திருமண மண்டபம் உள்ளது. இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கஅடுக்கு மேம்பாலம் கட்ட மத்திய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டது.

இதையடுத்து இப்பகுதியில் உள்ள பல நிலங்களை கையகப்படுத்த முடிவுசெய்யப்பட்டது. இதில் விஜயகாந்த்தின் கல்யாண மண்டபமும் அடங்கும்.

ஆனால் இதை அரசியல் உள்நோக்கத்திலான முடிவு, திமுக திட்டமிட்டு தனதுமண்டபத்தை இடிக்கப் பார்க்கிறது, அழிக்கப் பார்க்கிறது என ஆவேசமாக குற்றம்சாட்டி வருகிறார் விஜயகாந்த்.

ஆனால் அதை கண்டுகொள்ளாத அரசு விஜயகாந்த்தின் கையகப்படுத்தப்படும்நிலத்துக்கு>ய இழப்பீடாக ரூ. 8 கோடியை நிர்ணயித்துள்ளது.

இந் நிலையில் மண்டபத்தை கையகப்படுத்துவதை எதிர்த்து மண்டப நிலத்துக்குச்சொந்தக்காரரான விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதி ராமசுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. விஜயகாந்த் சார்பாகடெல்லியிலிருந்து வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஆஜரானார்.

இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி பிப்ரவரி 3ம் தேதிக்கு விசாரணையைஒத்திவைத்தார். அன்றைக்குள் மத்திய அரசும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்டி.ஆர்.பாலுவும் விளக்கம் அளிக்கக் கூறி நோட்டீஸ் அனுப்பவும் அவர்உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+