தயாநிதிக்கு பாபா தந்த மாய மோதிரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:மக்களுக்கு உதவும் மனப்பான்மை பணக்காரர்களுக்கு வர வேண்டும். நல்ல மனதுடன் இருக்க வேண்டும்,பகைமை பாராட்டக் கூடாது என்று கூறினார் புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபா.

சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் சாய்பாபா பேசுகையில், மக்களுக்கு இலவச கல்வி, மருத்துவ உதவி,குடிநீர் ஆகியவற்றை முக்கியமாக கருதி நான் அவற்றை செய்து வந்திருக்கிறேன். இந்த மூன்றையும்அளிப்பதுதான் திருப்தி தரக் கூடியது.

செல்வந்தவர்கள் ஏழைகளுக்கு உதவ முன்வர வேண்டும். ஏழை, நோயாளி ஆகியோருக்கு எந்தவிதஎதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னலமற்ற சேவையை செய்ய முன்வர வேண்டும்.

எல்லா மதங்களும் நல்ல விஷயங்களையே போதிக்கின்றன. எனவே அனைத்து மதங்களையும் மதிக்கவேண்டும்.

சகோதரத்துவத்துடன் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து உதவி செய்து, மற்றவர் துன்பத்தில் பங்கெடுத்துக்கொண்டு வாழ வேண்டும். நல்ல மனதுடன் இருங்கள், பகைமை பாராட்டாதீர்கள் மற்றவர்களிடம் வெறுப்பைவளர்க்காதீர்கள். ஒற்றுமையாக இருங்கள்.

பணம் காசு வரும் போகும். நல்ல பண்பு வந்தால் அது நிலைக்கும். எங்கு அமைதி இருக்கிறதோ, அங்கு அன்புஇருக்கும்.

நாட்டைத் துண்டாடுவது பாவச் செயல். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒரே பாரதம் என்றஎண்ணம் அனைவருக்கும் வர வேண்டும் என்றார் சாய்பாபா.

துரைமுருகன், தயாநிதிக்கு பாபா மோதிரம்:

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், இங்கு அரசியலும், ஆன்மீகமும்கலந்திருக்கிறது. அரசியல் மூலம் ஏழைகளை சிரிக்க வைப்பவர் கருணாநிதி. ஆன்மீகம் மூலம் ஏழைகளை சிரிக்கவைப்பவர் சாய்பாபா.

நதி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன, வயலுக்கு தண்ணீர் பாய்கிறதா என்றுதான் பார்க்கவேண்டும். சாய்பாபாவால் தர முடியாதது எதுவும் இல்லை. நீங்கள் நினைத்தால் கோடி கோடியாக கொடித் தரகாத்திருக்கிறார்கள்.

முதல்வர் அனுமதிப்பார் என்ற நம்பிக்கையுடன் 3 கோரிக்கைகளை உங்கள் முன் வைக்கிறேன். இலவச சிகிச்சைஅளிக்கும் உயர் தர மருத்துவமனைகள், சிறந்த கல்வி நிலையங்களை ஆந்திராவிலும், பிற மாநிலங்களிலும்நடத்துகிறீர்கள். உங்கள் சேவை தமிழகத்துக்கும் வர வேண்டும்.

தமிழக எல்லையிலிருந்து புழல் ஏரி வரை உள்ள கால்வாயையும் சீரமைத்துத் தர வேண்டும். கூவத்தையும்நீங்கள்தான் மணக்க வைக்க வேண்டும். சென்னை இருக்கும் வரை கூவம் இருக்கும். அது வரை உங்கள் பெயரும்நிலை பெற்றிருக்கும்.

ராணிப்பேட்டையில் நிலத்தடி நீர் மோசமாகி விட்டது. அங்கு ஓகனேக்கல் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றித் தரவேண்டும்.

முதல்வர் வீட்டுக்கு சாய்ப்பா வந்திறங்கியதும், நானும் தயாநிதி மாறனும் பூச்செண்டு கொடுத்து வரவேற்றோம்.அவரது ஆன்மீக சக்தியால் மோதிரங்கள் வரவழைத்து எனக்கும், தயாநிதி மாறனுக்கும் தந்தார். இதைப் பார்த்துவியந்தோம்.

எங்களுக்கு மோதிரம் வழங்கிய பாபா, முதல்வருக்கு மோதிரம் வரவழைத்துக் கொடுக்கவில்லையே என்றுநினைத்தேன்.

அப்போதுதான் அண்ணா அணிவித்த மோதிரத்தை அணிந்துள்ள கை, வேறு எந்த மோதிரத்தையும் ஏற்காதுஎன்பதை முன் கூட்டியே அறியும் சிந்தனை பாபாவுக்கு என்பதை உணர்ந்தேன் என்றார் துரைமுருகன்.

பாபாவின் பேனர் எரிந்தது: தீவைப்பா?

இந் நிலையில் கோட்டூர்புரத்தில் வைக்கப்பட்டிருந்த சாய்பாபா பேனர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது விபத்தா அல்லது விஷமிகள் செயலா என போலீஸார்விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் பாபா தங்கியுள்ள நிலையில் அவரை வரவேற்று கோட்டூர்புரத்தில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. சத்ய சாய் அறக்கட்டளை சார்பில் இந்தபேனர் வைக்கப்பட்டிருந்தது. கோட்டூர்புரம் பாலம் அருகே பிரமாண்ட சைஸில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு பேனர் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள், குடியிருப்புகளில் வசிப்பவர்கள்தீயணைப்புப் படையினருக்கும், பாலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சைதாப்பேட்டை போலீஸார் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அதற்குள் பேனரின் ஒரு பகுதி கருகிவிட்டது. பின்னர் அந்த பேனரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் இருந்த இன்னொரு பேனரையும் போலீஸார் அகற்றினர். இது விபத்தா அல்லது விஷமிகள் செயலா என்பதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் விஷமிகள் செயல்தான் இது என பாபா பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் மின் கசிவால்தான் தீவிபத்து ஏற்பட்டிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

சமீப காலமாக பெரியார், பிள்ளையார் சிலைகள், கோவில்களில் தாக்குதல் நடத்தப்பட்டு அந்த பரபரப்பு அலை தற்போதுதான் ஓய்ந்துள்ளது. இந்தநிலையில் சாய்பாபாவின் பேனர் தீப்பிடித்து எரிந்தது புதிய பரபரப்புக்கு நெய் ஊற்றுவது போல அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+