பெங்களூரில் பயங்கர கலவரம் - வீடுகள் சூறை:ஊரடங்கு-கோவையிலிருந்து அதிரடிப்படை விரைவு
பெங்களூரூ:பெங்களூரில் இந்து அமைப்பு நடத்திய பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் பேருந்துகள்,ஆட்டோக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வீடுகளுக்குள் புகுந்து கும்பல் சூறையாடிது. அபார்ட்மெண்ட்களில்நுழைந்து கார்களை உடைத்தது. கலவரத்தைத் தடுக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுவன்பலியானான்.
ஈராக் அதிபர் சதாம் உசேனைத் தூக்கிலிட்டதைக் கண்டித்து கடந்த வெள்ளிக்கிழமை சிவாஜி நகரில் கண்டனக்கூட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் நடத்திய பேரணியில்பயங்கர வன்முறை நடந்தது.
வழியெங்களும் கார்கள், பஸ்கள், ஆட்டோக்கள், கடைகள் உடைக்கப்பட்டு எரிக்கப்பட்டன. இதனால் சிவாஜிநகர், அல்சூர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவி வந்தது.
இந் நிலையில் நேற்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் விராட் இந்து மாநாடு நடந்தது.
மாநாட்டையொட்டி பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பேரணி மூங்கில் பஜார் வழியாகசென்றது. அப்போது சிலர் ஒரு பேருந்தை நிறுத்தி தீவைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வன்முறை வெடித்து. ஆங்காங்கு வாகனங்கள் தாக்கப்பட்டு, எரிக்கப்பட்டன. மர்பி டவுன் பகுதியில்நான்கு பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன. ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் என கண்ணில் கண்டவாகனங்களை தாக்கி தீவைத்தனர்.
தொடர்ந்து சிவாஜி நகர், கங்காதர் நகர், இந்திரா நகர், அல்சூர், பாரதி நகர், பிரேசர் நகர், ஒய்சாளா நகர் என பலபகுதிகளிலும் வன்முறை பரவியது. இப்பகுதிகளில் எங்கு பார்த்தாலும் வாகனங்கள் எரிந்து கொண்டிருந்தன.கமர்ஷியல் தெருவில் ஒரு கடை தீவைத்து எரிக்கப்பட்டது.
மேலும் அல்சூர் பகுதியில் அபார்ட்மெண்ட்களுக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்த கார்களைஉடைத்து தீ வைத்தன. பல வீடுகளும் சூறையாடப்பட்டன.
ஆனால், வெள்ளிக்கிழமை நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த தவறி போலீசார் நேற்றும் அதே போல மிகமோசமாக செயல்பட்டனர். அவர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
இந் நிலையில் சிவாஜி நகரைச் சேர்ந்தவர்கள் வாள்களுடன் பதில் தாக்குதலுக்கு கிளம்பியதையடுத்து முழு மதக்கலவரமாக நிலைமை மாற இருந்தது.
இதையடுத்து போலீஸார், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தினரை விரட்டியடிக்க முயன்றனர்.தடியடியும் நடத்தப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரதி நகர் காமராஜர் சாலையில் வன்முறைக் கும்பல் வெறியாட்டம் போட்டதால் போலீஸார் துப்பாக்கிச் சூடுநடத்திக் கலைத்தனர். இதில் 12 வயது சிறுவன் இறந்தான். 3 பேருக்குக் குண்டுக் காயம் ஏற்பட்டது.காயமடைந்தவர்கள் அரசு பெளரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறையில் சிக்கிக் காயமடைந்த 15 பேரும், 3 போலீஸாரும் அதே மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறை காரணமாக பெங்களூர் நகரின் பதட்டமான பகுதிகளில் இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவுஅமல்படுத்தப்பட்டது. இன்று காலையும் ஊரடங்கு அமலில் இருக்கும் என தெ>ரிக்கப்பட்டது.
நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக முதல்வர் குமாரசாமி வழக்கம்போல் தெரிவித்துள்ளார். இந்தகலவரத்தின் பின்னணியில் சமூக விரோதிகள் இருப்பதாகவும் அவர் கண்டுபிடித்துள்ளார் .
கலவரம் நடந்த பகுதிகளில் 7,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மொத்த கலவரத்துக்கும் போலீசாரே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கலவரக்காரர்களால் தாக்கப்பட்ட வீடுகளைச் சேர்ந்தவர்கள் போலீசாரிடம் சென்று புகார் கொடுத்தபோதுஅவர்களிடமே காக்கிகள் வாக்குவாதம் செய்ததை பார்க்க முடிந்தது.
இந் நிலையில் இன்று கிழக்கு பெங்களூரின் பல பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, கொச்சியிலிருந்து அதிரடிப்படை:
இந் நிலையில் நகரில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் கோவை மற்றும் கொச்சியிலிருந்து விரைவுஅதிரடிப்படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று பெங்களூரு நகரில் கொடி அணிவகுப்புநடத்தினர்.
இந் நிலையில் இன்று காலை முதல் கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை படிப்படியாக திரும்பத்தொடங்கியுள்ளது. நேற்று இரவுக்கு மேல் புதிதாக எந்த வன்முறை சம்பவமும் நடக்கவில்லை என்று பெங்களூருகாவல்துறை ஆணையர் நீலம் அச்சுதராவ் தெரிவித்துள்ளார்.
சிவாஜி நகர், பாரதி நகர், அல்சூர், டானரி ரோடு, காடுகொண்டனஹள்ளி, திம்மையா சாலை ஆகிய இடங்களில்ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும் போலீஸ் 144 தடை உத்தரவுதொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications