பெரியப்பா மகனைக் காதலித்த மகள்!: அதிர்ச்சியில் தந்தை, தாய், தங்கை தற்கொலை!
கடலூர்:பெரியப்பா மகனை தங்கள் வீட்டுப் பெண் காதலித்ததால் அவமானமடைந்த கடலூரைச் சேர்ந்த குடும்பத்தினர் 3பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். பிரச்சினைக்குக் காரணமான பெண்ணும் விஷம்சாப்பிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் அருகே உள்ள சங்குலி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 45). இவரது மனைவி மல்லிகா (38),மகள்கள் வினோதா (20), வனிதா (12).
வினோதா, தனக்கு அண்ணன் முறை வரும் தனது பெரியப்பா மகன் சுசேந்திரனைக் காதலித்துள்ளார். இதுதெரியாமல் வினோதாவுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து வினோதா, சுசேந்திரனுடன் வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டார். பின்னர் அவர் தனதுவீட்டுக்குத் திரும்பி வந்தார். அப்போது சுசேந்திரனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்றுதிட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதைக் கேட்டு குமாரும், மல்லிகாவும் அதிர்ச்சி அடைந்தனர். சுசேந்திரன் உனக்கு அண்ணன் முறை வரும்.அப்படி இருக்கையில் எப்படிக் கல்யாணம் செய்து கொள்ள முடியும், ஊர் உலகம் என்ன சொல்லும் எனவினோதாவைத் திட்டியுள்ளனர். ஆனால் தனது முடிவில் வினோதா உறுதியாக இருந்துள்ளார்.
இதைக் கேட்டு கோபமடைந்த குமார், அப்படியானால் நாங்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம்என்று கூறியுள்ளார். நீங்கள் செத்தால் நான் மட்டும் உயிருடன் இருப்பேனா, நானும் தற்கொலை செய்துகொள்வேன் என்று வினோதாவும் பதிலுக்குக் கூறியுள்ளார்.
இதையடுத்து கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய குமார் விஷத்தை வாங்கி வந்தார். பின்னர் தங்களதுகாதுகள் மூலம் விஷத்தை உள்ளே செலுத்தியுள்ளனர். இதில் விஷம் உடலுக்குள் புகுந்து குமார், மல்லிகா, வனிதாஆகியோர் பரிதாபமாக மரணமடைந்தனர்.
கடைசியாக விஷம் செலுத்திய வினோதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர் உயிருக்குப் போராடி வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications