விஜயகாந்த் வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட்:அக்கா-மச்சான் வீடு-அலுவலகங்களிலும் சோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:என்ஜியரிங் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகதேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த்துக்கு சொந்தமான சென்னை வீடுகள்,திருமண மண்டபம், கல்லூரி, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைநடத்தினர்.

Vijaykanth

மதுரை சென்ட்ரல் தியேட்டர் எதிரே உள்ள விஜய்காந்தின் வீடு, அரிசி ஆலை, சினிமாஅலுவலகம், அவரது அக்கா டாக்டர் விஜயலட்சுமியின் வீடு, அவருக்கு சொந்தமானமருத்துவமனையிலும் ரெய்டு நடந்தது.

மேலும் விஜய்காந்துக்கு நெருக்கமானவர்கள், நண்பர்களின் வீடுகளிலும் சோதனைநடந்தது. செங்கல்பட்டு அருகே விஜய்காந்த் நடத்தி வரும் ஆண்டாள்-அழகர் செல்ப்பைனான்சிங் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையில் பெரும் பண முறைகேடுநடந்துள்ளதாகவும், விஜய்காந்த் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் கிடைத்ததகவல்களையடுத்து இந்த ரெய்ட் நடத்தப்பட்டுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜய்காந்தின் வீட்டில் இன்று காலை 9 மணி முதல் சோதனை நடந்தது. அதேபோல அவரது அலுவலகத்திலும் ரெய்ட் நடந்தது.

விஜய்காந்தின் கல்லூரி நிர்வாக அலுவலகம் கோயம்பேட்டில் உள்ள அவரது கல்யாண மண்டபத்தில் செயல்பட்டுவருகிறது. அங்கும் சோதனை நடந்தது.

கல்லூரியின் நிர்வாகியும் விஜய்காந்தின் மச்சானும் படத் தயாரிப்பாளருமான சுதீசின் விருகம்பாக்கம் வீட்டிலும்,அலுவலகத்திலும், அவரது தங்கை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் சாலிகிராமம் 100 அடி ரோட்டில்உள்ள சுதீசுக்கு சொந்தமான லீ கிளப் என்ற கேளிக்கை விடுதியிலும் வருமான வரித்துறையினர் சோதனைநடத்தினர்.

Vijaylakshmis Madurai hospital

அதே போல மதுரை மேலமாசி வீதியில் உள்ள விஜய்காந்தின் சகோதரி விஜயலட்சுமியின் மருத்துவமனை,மாகாளிப்பட்டியில் விஜய்காந்த் லீசுக்கு எடுத்து நடத்தும் ரைஸ் மில், மேல் ஆவணி மூல வீதியில் உள்ளஆண்டாள்-அழகர் பிலிம்ஸ் அலுவலகம் ஆகியவற்றிலும் ரெய்ட் நடந்தது.

அதே போல உடுமலைபேட்டையில் முன்னாள் தேமுதிக மாவட்ட செயலாளர்கணேஷ்குமாரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவரதுவீடு, அவர் நடத்தி வரும் புரபஷனெல் கூரியர் சர்வீஸ் நிறுவன அலுவலகம் மற்றும்அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

வருமானவரித் துறை கூடுதல் இயக்குனர் ஜெயராம் தலைமையில் 30 பேர் கொண்டகுழு இன்று அதிகாலை முதல் சோதனைகளில் ஈடுபட்டுள்ளது. இவர் மிகமுக்கியமான நபரின் பினாமி என்று கருதப்படுகிறது.

இந்த சோதனைகளில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

போலீஸ் வேன் மீது தாக்குதல்:

சென்னை விஜய்காந்த் வீட்டில் சோதனை நடந்தபோது அங்கு ஏராளமான தேமுதிகதொண்டர்கள் குவிந்தனர். இதையடுத்து வருமான வரித்துறையினரின்பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந் நிலையில் தேமுதிக தொண்டர்கள் திமுகவைத் தாக்கி கோஷமிட்டபடி போலீஸ்வாகனங்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களை போலீசார் வீடியோஎடுத்தனர். இதையடுத்து அவர்களாகவே கலைந்து சென்றுவிட்டனர்.

கருணாநிதி கொடும்பாவி எரிப்பு:

இந் நிலையில் விஜய்காந்த் வீட்டு ரெய்டை கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் முதல்வர் கருணாநிதியின் கொடும்பாவியை எரித்தும் போராட்டம்நடத்தினர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+