விஜயகாந்த் வழிக்குவரும் தமிழக அரசு!
சென்னை:ரேஷன் பொருட்களை பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் முறை சோதனைரீதியாகசென்னையில் அமல்படுத்தப்படவுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் ஏ.வ. வேலுசட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபைத் தேர்தலின்போது தேமுதிக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல்அறிக்கையில் இடம் பெற்றிருந்த முக்கிய வாக்குறுதி, ரேஷன் பொருட்களைபாக்கெட்டுகளில் அடைத்து வீடு தேடி வந்து கொடுப்போம் என்பது.
இது சாத்தியமே இல்லை என்று திமுக உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் தேர்தல்பிரசாரத்தின்போது விமர்சித்துப் பேசின. இப்போது விஜயகாந்த் வழிக்கு திமுக அரசுதிரும்பத் தொடங்கியுள்ளது.
சட்டசபையில் இன்று உணவுத் துறை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்குஅமைச்சர் வேலு பதிலளிக்கையில், ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் அடைத்துவிற்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரினர்.
ஏழைகளுக்கு விலை குறைவாக வழங்க வேண்டும் என்பதால்தான் கிலோ அரிசி 2ரூபாய்க்கு என்ற நல்ல திட்டத்தை முதல்வர் கொண்டு வந்தார். பாக்கெட்டில் அடைத்தபொருட்களை கொடுத்தால் விலை உயர வாய்ப்புள்ளது.
எனவே உடனடியாக இதை அமல்படுத்த இயலவில்லை. சென்னையில் உள்ள சிலவர்த்தக நிறுவனங்கள் ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் அடைத்துத் தரமுன்வந்துள்ளன. எனவே சோதனை ரீதியாக, சென்னையில் உள்ள ரேஷன்கடைகளில், பாக்கெட்டுகளில் அடைத்து பொருட்களை கொடுப்பது குறித்துஆலோசனை நடந்து வருகிறது.
இது வெற்றி பெற்றால் பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்டபகுதிகளுக்கு விஸ்தரிப்பது குறித்து முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்என்றார் வேலு.
பாக்கெட்டுகளில் அடைத்து விற்றால் ரேசன் கடை ஊழியர்களின் எடை தில்லுமுல்லுவில் இருந்து மக்கள் தப்பமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications