800 மாணவர்களுக்கு ஒரு வாத்தியார்!
பெங்களூரு:புகழ் பெற்ற விஞ்ஞானியான விஸ்வேரய்யா பெயரில் பெங்களூரில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரியில் 800மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் பாடம் நடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
புகழ் பெற்ற விஞ்ஞானி விஸ்வேரய்யா. கட்டிடக் கலையில் வல்லுனரான அவர் இந்தியாவின் பல புகழ் பெற்றகட்டடங்களை வடிவமைத்தவர். மைசூர் அருகே உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையையும் அவர்தான்வடிவமைத்தார்.
அவரது பெயரில் பெங்களூரில் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறை மிகக்கொடுமையாக உள்ளது. இக்கல்லூரியில் படிக்கும் 800 மாணவர்களுக்கும் ஒரே ஒரு ஆசிரியர்தான் பாடம் நடத்திவருகிறார்.
கம்ப்யூட்டர் அறிவியல் துறைத் தலைவராக உள்ள டாக்டர் கே.ஆர்.வேணுகோபால்தான் 800 மாணவர்களுக்கும்பாடம் எடுத்து வருகிறார். காலை 9 மணிக்கு பாடம் நடத்த ஆரம்பிக்கும் இவர் இரவு 9 மணி வரைகல்லூரியிலேயே இருந்து பாடம் நடத்துகிறார்.
அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் விதிமுறைப்படி, ஒரு கல்லூ>யில் 800 மாணவர்கள் இருந்தால்,குறைந்தது 50 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் விஸ்வேரய்யா பொறியியல் கல்லூரியில் ஏன் இந்தஅவல நிலை?
மிகக் குறைவான சம்பளம் கொடுப்பதால்தான் இங்கு பணியாற்ற யாரும் வருவதில்லையாம். சமீபத்தில் இந்தக்கல்லூரிக்கு பேராசிரியர்களை தேர்ந்தெடுக்க பெங்களூர் பல்கலைக்கழகம் ஒரு விளம்பரம் கொடுத்தது.
அதில், முழு நேர விரிவுரையாளர்கள் 30 பேர் தேவை, மாத சம்பளம் ரூ. 10 ஆயிரம்; ரூ. 5 ஆயிரம்சம்பளத்துக்கு பகுதி நேர விரிவுரையாளர்கள் 10 பேர் தேவை என கூறப்பட்டிருந்தது. இப்படி அடிமாட்டுசம்பளத்திற்கு யாராவது காலை முதல் இரவு வரை வேலை பார்க்க வருவார்களா என்று பொறியியல் படித்தமாணவர்கள் ஏளனமாக கேட்கிறார்கள்.
பொறியியல், கம்ப்யூட்டர் அறிவியல் படித்த மாணவர்களுக்குத் தனியார் நிறுவனங்கள், கல்லூரிகளில் நல்லசம்பளம் கொடுக்கும் நிலையில் இவ்வளவு குறைவாக கொடுத்தால் யார்தான் வருவார்கள்?
வேணுகோபாலுக்கு உதவுவதற்காக தற்காலிக 2 பேர் நியமிக்கப்பட்டனராம். அதில் ஒருவர்தான் ஒழுங்காகபணிக்கு வருகிறார். இன்னொருவர் கடந்த 6 மாதங்களாக ஆளையே காணோமாம்.
ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக தேர்வு விடைத்தாள்களை திருத்த ஆள் கிடைக்காமல், இக்கல்லூரியில்படித்த முன்னாள் மாணவர்களை அணுகி விடைத்தாள்களை திருத்தக் கோருகிறார்களாம்.
இந்தக் கல்லூரியில்தான் கிரிக்கெட் வீரர் அணில் கும்ப்ளே படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரையும்விடைத்தாள் திருத்த அணுகினார்களா என்று தெரியவில்லை!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications