சூடானில் இந்திய வீரர் சுட்டுக் கொலை
நியூயார்க்:சூடானில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
சூடானில் 21 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுக் கலகம் 2005ம் ஆண்டு ஐ.நா.வின் தலையீட்டால் முடிவுக்குவந்தது. இதையடுத்து அந்நாட்டுக்கு ஐ.நா. சார்பில் அமைதி காக்கும் படை அனுப்பப்பட்டது.
அந்தப் படையில், 10 ஆயிரத்து 300 ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸார் இடம் பெற்றிருந்தனர். தெற்குசூடானில் இவர்கள் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சூடான் போலீஸாருக்கு பயிற்சி அளிப்பது, மனித உ>மை ஆர்வலர்களுக்கு உதவுவது, தீவிரவாதிகள் வைத்துள்ளகண்ணிவெடிகளை அகற்ற உதவுவது உள்ளிட்ட பணிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இப்படையில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் சார்பில் 2 ஆயிரத்து 606 ராணுவ வீரர்கள், 28 காவல்துறைஅதிகாரிகள், 21 ராணுவ மேற்பார்வையாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய வீரர்கள் சிலர் தெற்கு சூடானில் உள்ள மாகவே என்ற நகரில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில்ஈடுபட்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் சுட்டதில் இந்திய வீரர்ஒருவர் கொல்லப்பட்டார். 2 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்துவிசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக்கூறுகையில், சூடான் அரசியல் கட்சிகள் இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பான் கிமூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய அரசுக்கும், சுட்டுக் கொல்லப்பட்ட வீரரின் குடும்பத்திற்கும் பான் கி மூன் ஆழ்ந்த இரங்கல்களையும்,ஆறுதலையும் தெரிவித்துள்ளார் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications