சேரன் எக்ஸ்பிரஸ் கவிழ்ந்தது; 70 பேர் காயம்
சென்னை:கோவையிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆம்பூர் அருகே தடம்புரண்டுகவிழ்ந்தது. இதில் 70 பயணிகள் காயமடைந்தனர். 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கோவையிலிருந்து நேற்று இரவு 10.30 மணிக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்குக் கிளம்பியது. 24பெட்டிகளுடன் கிளம்பிய இந்த ரயிலில் 2000 பயணிகள் பயணித்தனர்.
இன்று காலை 3.30 மணியளவில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள விண்ணமங்கலம் ரயில் நிலையம்அருகே ரயில் வந்தபோது திடீரென தடம் புரண்டது. முதலில் எஸ். 7 பெட்டி கவிழ்ந்து விழுந்தது. இதையடுத்துஅதற்கடுத்துள்ள நான்கு பெட்டிகள் சடசடவென்று கவிழ்ந்து விழுந்தன.
ரயில் அப்போது மெதுவாக சென்று கொண்டிருந்ததால் இந்த அளவோடு போனது. உடனடியாக ரயில்நிறுத்தப்பட்டது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விழுந்ததில் மின்சார போஸ்ட் இடிந்து விழுந்து, மேலே சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த மின்சார ஒயர் அறுந்து கீழே விழுந்தது.
நல்ல வேளையாக மின்சார ஒயர் ரயில் பெட்டி மீது விழவில்லை. இதனால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்படுவதுதவிர்க்கப்பட்டது.
அந்தப் பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து பெட்டிகளுக்குள் சிக்கிக் கொண்டவர்களை மீட்டு வெளியேகொண்டு வந்தனர். ரயில்வே போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில்ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 70 பயணிகள் காயமடைந்தனர். அவர்களில் செந்தில், யாசின், பெருமாள், வீரலட்சுமி, தயாளன்,குமார், பன்னீர் ஆகிய 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்கள் ஆம்பூர் மற்றும் வேலூர்அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் பஸ்கள் மூலமும், பிற ரயில்கள் மூலமும்சென்னைக்கு பயணித்தனர்.
இந்த விபத்து காரணமாக ஜோலார்பேட்டை-சென்னை சென்டிரல் இடையிலான ரயில் பாதையில் ஐந்து மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.
சம்பவம் நடந்த இடத்தை வேலூர் ஆட்சித் தலைவர் தர்மேந்திர பிரசாத் யாதவ், எஸ்.பி. அசோக்குமார், ரயில்வேஎஸ்.பி. ஆனி விஜயா உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல்தான் ரயில் தடம் புரளக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. இது எப்படிஏற்பட்டது, சதிச் செயலா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
விரிசல் அடைந்த தண்டவாளத்தை சீர்படுத்தும் பணி நடந்து வருகிறது. இன்று மாலைக்குள் இந்தப் பணிமுடிவடையும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications