கிரில் கொள்ளையர்கள் வங்கதேசத்தினர்!: 3 பெண்களும் கைது
சென்னை:தமிழகத்தில் நடந்து வந்த கிரில் கொள்ளைகள் தொடர்பாக கொல்கத்தாவில்பிடிபட்டுள்ள 11 கொள்ளையர்களும் வங்க தேசத்தைச் சேர்நதவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அவர்களில் 3 பேர் பெண்கள். அவர்களை சென்னைக்குக் கொண்டு வரபோலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கலக்கி வந்தவர்கள் கிரில் கொள்ளையர்கள்.வீடுகளின் ஜன்னல் கிரில் கம்பிகளை வளைத்து உள்ளே நுழைந்து திருடிச் செல்வது இவர்களது பாணி. நகை,பணத்தை மட்டுமே கொள்ளையடிப்பார்கள், ஆள் இல்லாத வீடுகளைத்தான் நோட்டமிட்டுக் கொண்டு நுழைந்துகொள்ளை அடிப்பார்கள்.
புறநகர்ப் பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் இந்த கிரில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.சென்னை தவிர மதுரையில் 11 வீடுகள், வேலூரில் 7 வீடுகள் சென்னைக்கு வெளியிலும் துணிகரத் திருட்டைநடத்தியுள்ளனர்.
தாங்கள் நுழையப் போகும் வீட்டை முன்கூட்டியே நோட்டமிட்டு தெளிவாக அடையாளம் பார்த்துக்கொள்வார்கள் இந்த திருடர்கள். எப்படி நுழையலாம், எப்படித் தப்பலாம் என்பதை தெளிவாக திட்டமிட்டபின்னரே திருட்டில் குதிப்பர். இந்தக் கொள்ளைக் கும்பலைப் பிடிக்க போலீஸார் பல்வேறு தனிப்படைகள்அமைத்த வலை வீசித் தேடிசியும் கூட இக்கும்பலைப் பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் கூடுதல் ஆணையர் ஜாங்கிட் தலைமையில் புதிய தனிப்படை அமைக்கப்பட்டது.ஏற்கனவே பவேரியா கொள்ளைக் கும்பலை உத்தரப் பிரதேசம் வரை விரட்டிப் போய் பிடித்து 2 பேருக்குத்தூக்குத் தண்டனையும் வாங்கிக் கொடுத்து கலக்கியவர் ஜாங்கிட் என்பது நினைவிருக்கலாம். இந்தக் கும்பல்தான்கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்களைக் கொன்றது.
எனவே கிரில் கொள்ளையர்களையும் வளைத்துப் பிடிக்க துரிதமாக களத்தில் இறங்கிய ஜாங்கிட், தனதுதலைமையில் தனிப் படைகளை அமைத்தார்.
இந் நிலையில் விசாரணை தீவிரமாக நடந்து கொண்டிருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்திருமுல்லைவாயிலில் உள்ள ஒரு வீட்டிற்குள் கிரில் கொள்ளையர்கள் புகுந்து விட்டனர். அவர்களை பக்கத்துவீட்டுக்காரர் பார்த்துள்ளார். உடனடியாக அவர் போலீஸுக்குத் தகவல் தர தனிப்படை போலீஸார் மின்னலெனவிரைந்தனர். வீட்டுக்குள் திருட்டில் மும்முரமாக இருந்த 2 கொள்ளையர்களையும் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்தக் கும்பல் குறித்த தகவல்கள்வெளியாகின. ஆள் இல்லாத வீடுகளின் ஜன்னல் கம்பிகளை வளைத்து உள்ளேபுகுந்து நகை, பணத்தைத் திருடுவதுதான் இந்தக் கும்பலின் வேலை. கடந்த ஆறுவருடங்களில் 79 வீடுகளில் ரூ. 23 லட்சம் பணம், 1,358 பவுன் நகைகளை இந்தக்கும்பல் திருடியுள்ளது.
திருமுல்லைவாயிலில் சிக்கிய 2 கொள்ளையர்களும் கொடுத்த தகவலின் பேரில்கொல்கத்தாவுக்கு விரைந்த தனிப்படை போலீஸார் அங்கிருந்த இவர்களின்கூட்டாளிகளை வளைத்துப் பிடித்தனர். முதலில் இவர்கள் நேபாள நாட்டைச் சேர்ந்தகூர்காக்க்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள்என தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் இன்றுசெய்தியாளர்களிடம் பேசுகையில், கிரில் கொள்ளை தொடர்பாக 11 பேர் கொண்டகும்பலைப் பிடித்துள்ளோம். அனைவரும் வங்க தேசத்தவர்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் விவரம்:
ஜாகிர்கான், கலுப்பன் ஷா, ஷான் அலிகான், லூபர் ஷேக், அபுமன்னா, உபைதுல்லாபட், டிஜானூர் தலுகான், அன்வர் கோல்பைட் மற்றும் பெண்களான முமைரோ பீவி,கரீமா பீவி, சுனந்த் ஆகியோர்.
வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவி, மேற்கு வங்க மாநிலம் யாதவ்பூர்பகுதியில் திருட்டுத்தனமாக குடியேறியவர்கள். பின்னர் அங்கிருந்து சென்னைஉள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வந்து கிரில் கொள்லையில்ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் ரயில் மூலம் சென்னைக்கு வருவார்கள். பின்னர் இங்கு பாய்கள்,தலையணைகள், பிளாஸ்டிக் பூக்கள் என விதம் விதமான பொருட்களுடன்விற்பனையாளர்கள் போல ஆளுக்கு ஒரு பகுதிக்குச் செல்வார்கள்.
காலையில் விற்பனை என்ற பெயரில் கிளம்பி தாங்கள் செல்லும் பகுதியில்பூட்டியுள்ள வீடுகளை நோட்டம் இட்டுக் கொள்வார்கள். மாலையில் அனைவரும்ஒன்றாக கூடி அன்று இரவு எந்த வீட்டில் கொள்ளையடிப்பது என்று திட்டம்தீட்டுவார்கள்.
சென்னையில், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ராமசாமி தெருவில் உள்ளவிடுதிகளில் தங்கி இவர்கள் கொள்ளையடித்து வந்துள்ளனர். போலீஸ் நடவடிக்கைமுடுக்கி விடப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் விடுதிகளைக் காலி செய்து விட்டுமேற்கு வங்கத்திற்கு ஓடி விட்டனர்.
தமிழகத்தில் இருந்து சென்ற தனிப் படை போலீஸ் கொல்கத்தாவின் யாதவ்பூர்பகுதியில் விசாரணை மேற்கொண்டிருந்தபோது, பூஜ்கான் என்ற பெண்ணின்வீட்டுக்கு பலர் நகை, பணத்துடன் வந்து போவதாக தெரிய வந்தது. இதையடுத்துஅந்தப் பெண்ணிடம், உள்ளூர் போலீஸ் உதவியுடன் விசாரித்தபோது, தனதுஉறவினர்கள் சென்னைக்குச் சென்று தொழில் செய்த நகை, பணம் சம்பாதித்து வந்துகொடுப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள்தான் அந்தக் கிரில் கொள்ளைக் கும்பல் என்பது உறுதியானது.பின்னர் போலீஸார் அதிரடியாக விசாரித்ததில் முழு உண்மையும் தெரிய வந்தது.கொள்ளையடித்து வந்து கொடுத்த நகைகளில் சிலவற்றை மேற்கு வங்கத்திலும்,பெரும்பாலானவற்றை வங்கதேசத்திலும் அவர்கள் விற்றுள்ளனர்.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இக் கும்பலிடம் இருந்து நகை, பணம்எதுவும் கைப்பற்றப்படவில்லை.












Click it and Unblock the Notifications