100 வார்டுகளுக்கு பிப் 18ல் தேர்தல்-இன்று வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்
சென்னை:திமுக கூட்டணியினர் ராஜினாமா செய்த வார்டுகள் உள்பட மொத்தம் 100 வார்டுகளுக்கும் பிப்ரவரி 18ம் தேதிமறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
கடந்த அக்டோபர் மாதம் சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறுகாணாத வன்முறை சென்னையில் நடந்தது.
வன்முறைக்கு மத்தியில் நடந்த இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால் இதைஎதிர்த்து அதிமுக, மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை நீதிபதிகள் முகோபாத்யாயா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து இருநீதிபதிகளும் இரு விதமான தீர்ப்பை அளித்தனர்.
நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா அளித்த தீர்ப்பில் 99 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் எனஉத்தரவிட்டார். இதை ஏற்று 98 வார்டுகளிலும் வெற்றி பெற்ற திமுக கூட்டணி கவன்சிலர்கள் ராஜினாமாசெய்தனர். பகுஜன் சமாஜ் கட்சி கவுன்சிலர் ஆம்ஸ்டிராங் மட்டும் ராஜினாமா செய்யவில்லை.
இதையடுத்து சமீபத்தில் இவர்களின் ராஜினாமா முடிவுக்கு மாமன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து ஏற்கனவே காலியாக உள்ள 2 வார்டுகள் (அதிமுக உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால்),தற்போது காலியாகியுள்ள 98 வார்டுகள், ஆக மொத்தம் 100 வார்டுகளில் பிப்ரவரி 18ம் தேதி மறு தேர்தல்நடத்த தேர்தல் ஆணையர் முடிவு செய்துள்ளது.
இத்தகவலை தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்தார். அதன்படி இந்த வார்டுகளுக்கான தேர்தல்அறிவிக்கை இன்று வெளியிடப்படுகிறது.
தேர்தல் அட்டவணை முழு விவரம்:
ஜனவரி 29 - வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
பிப்ரவ> 5 - வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்
பிப். 6 - மனுக்கள் பரிசீலனை
பிப். 8 - மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்
பிப். 18 - வாக்குப் பதிவு
பிப். 20 - வாக்கு எண்ணிக்கை
பிப். 21 - தேர்தல் நடவடிக்கை முடியும் நாள்
கட்சி அடிப்படையில் இந்தத் தேர்தல் நடைபெறும். மொத்தம் 2,195 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.இவற்றில் 536 வாக்குச் சாவடிகள் ஆண்களுக்கானவை, 536 பெண்களுக்கானவை, 1,123 சாவடிகள்பொதுவானவை. மொத்தம் 22.91 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் மார்ச் 1ம் தேதி நடைபெறும். மாநகராட்சி ஆணையாளர்,தேர்தலை நடத்தும் அதிகாரியாக இருப்பார்.
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு சந்திரசேகரன் பதிலளிக்கையில், தேர்தலுக்காக நல்ல முறையில்பாதுகாப்பு அளிக்கப்படும். இதற்காக அடுத்த மாதம் டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருடன் விவாதித்துபாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்படும்.
டிஜிபி, ஆணையருடன் பேசும் கூட்டத்தில் என்ன மாதி>யான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது என்பதுகுறித்து விவாதிக்கப்படும்.
உங்களது ராஜினாமாவை சில கட்சிகள் கோருகின்றனவே?
பேசுவதற்கு அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது
உயர்நீதிமன்றம் கூட கண்டனம் தெரிவித்துள்ளதே?
இரு விதமான தீர்ப்பு வந்துள்ளது. அதுகுறித்து விவாதிப்பது முறையல்ல என்றார் சந்திரசேகரன்.












Click it and Unblock the Notifications