திருவனந்தபுரத்தில் மோடி-பலத்த பாதுகாப்பு
திருவனந்தபுரம்:கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் இன்று மாலை தொடங்கும் இந்து மகா மேளாவில் குஜராத் முதல்வர்நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் இன்று மாலை திருவனந்தபுரம் புத்தரி கண்ட மைதானத்தில் இந்து மகாமேளா நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக சிறப்பு விமானம் மூலம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதிருவனந்தபுரம் வருகிறார்.
மகா மேளாவில் மோடி சிறப்புரையாற்றுகிறார், உத்திராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா மகாராஜா தலைமைதாங்குகிறார். மோடி வருகைக்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மோடி வருகையை கருப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. மோடிக்கு பலத்த பாதுகாப்பு வழங்க கேரள காவல்துறைக்கு அரசுஉத்தரவிட்டுள்ளது.
மகா மேளாவுக்கும் 3000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு வழங்குகின்றனர். வெடிகுண்டு நிபுணர்கள்,மோப்ப நாய்களும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு முதல் நகருக்குள்வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனையிடப்படுகின்றன.
மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ள மோடிக்கு கூடுதலாக 2 கருப்புப் பூணைப் படை வாகனங்கள்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. மகா மேளா நிகழ்ச்சியை முடித்து விட்டு இன்று இரவே மோடிகுஜராத் திரும்புகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications