மாமனார் செக்ஸ் தொல்லை-மருமகள் தற்கொலை
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில், மாமனாரின் செக்ஸ் தொல்லை மற்றும்கணவரின் சித்திரவதை தாங்க முடியாமல் நாலரை வயது குழந்தையின் தாய்தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கணவரை போலீஸார் கைது செய்தனர்.செக்ஸ் வெறி பிடித்த மாமனார் தலைமறைவாகி விட்டார்.
குமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்தவர் தாவீதுவின் மகள் நிர்மலா ஜெயந்தி. 30வயதான ஜெயந்தியும், 29 வயதான தக்கலையைச் சேர்ந்த ரஞ்சித் சிங்கும் காதலித்துத்திருமணம் செய்து கொண்டனர்.
![]() |
திருமணத்திற்குப் பிறகு நிகிலா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. அக்குழந்தைக்குதற்போது நாலரை வயதாகிறது. திருமணத்தின்போது நிர்மலாவுக்கு அவரதுகுடும்பத்திலிருந்து 45 பவுன் நகை, 2 லட்சம் ரொக்கப் பணம் கொடுத்தனர். பின்னர்குழந்தை பிறந்ததும் 3 பவுன் நகை போட்டனர்.
ஆனால், நகை, பணத்தையெல்லாம் ரஞ்சித்தும், அவரது தந்தை செல்வினும்வீணடித்து செலவழித்து விட்டனர். அதன் பிறகும் இருவரும் நிர்மலாவை கூடுதலாகவரதட்சணை வாங்கி வருமாறு கூறி கொடுமைப்படுத்தியுள்ளனர்.
![]() |
உச்சகட்டமாக நிர்மலாவுக்கு மாமனார் செல்வின் செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும்கூறப்படுகிறது. இதனால் மனம் வெறுத்த நிர்மலா, கடந்த 26ம் தேதி தனது வீட்டில்தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து செல்வின், ரஞ்சித் சிங் மீது தக்கலை போலீஸில் தாவீது புகார்கொடுத்தார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு நிர்மால எழுதி வைத்திருந்த 10பக்க கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில் தனது மாமனாரும், கணவரும்செய்த கொடுமைகளை விளக்கியிருந்தார்.
இதையடுத்து ரஞ்சித் சிங்கை போலீஸார் கைது செய்தனர். ஆனால் செல்வின்தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications