சென்னை-கோவை ரயில் போக்குவரத்து சீரானது
Subscribe to Oneindia Tamil
சென்னை:ஆம்பூர் அருகே சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட தண்டவாள பாதிப்பு சரி செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து நேற்று இரவு 9 மணிக்கு ரயில் போக்குவரத்து சீரடைந்தது.
![]() |
கோவையிலிருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்குக் கிளம்பிய சேரன் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்றுஅதிகாலை, வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வந்தபோது தடம் புரண்டது.
இதில் 5 முன் பதிவு பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 70 பயணிகள் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாகஉயிரிழப்பு ஏதும் இல்லை. தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலே இதற்குக் காரணம் என கண்டறியப்பட்டது.
இது சதிச் செயல் அல்ல என்றும் தண்டவாளத்தில் தானாக ஏற்பட்ட விரிசல்தான் காரணம் எனத் தெரிய வந்ததால்,விரிசலை சரி செய்யும் பணியும், சேதமடைந்த தண்டவாளப் பகுதிகளை சரி செய்யும் பணியும் முடுக்கிவிடப்பட்டன.
இப்பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று இரவு 9 மணி முதல் இப்பாதையில் ரயில் போக்குவரத்துசீரானது.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்













Click it and Unblock the Notifications