இது தான் காங்கிரஸ் ஸ்டைல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாகஅறிவிப்பதற்குள்ளாகவே, 2 கவுன்சிலர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டனர்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து திமுக கூட்டணியைச் சேர்ந்த 98 கவுன்சிலர்களும் ராஜினமாசெய்துள்ளனர். இதில் 25 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.

இந்த 98 இடங்களுக்கும், ஏற்கனவே அதிமுகவினர் ராஜினாமாவால் காலியாக உள்ள 2 இடங்களுக்கும் சேர்த்துமொத்தம் 100 வார்டுகளிலும் பிப்ரவரி 18ம் தேதி மறு தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் பாமக சார்பில் ஏற்கனவே கவுன்சிலர்களாகஇருந்தவர்களே மீண்டும் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தரப்பிலும் வேட்பாளர்களில் மாற்றம் இருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால், காங்கிரஸ் தரப்பில் இன்னும்எந்த அறிவிப்பும் வரவில்லை. வேட்பாளர் பட்டியலும் இன்னும் தயாராகவில்லை.

அவர்களையே மீண்டும் நிறுத்துவதா அல்லது புதிய வேட்பாளர்களை நிறுத்துவது என்பதா குறித்து கட்சிநிர்வாகிகளுடன் மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ஆலோசித்தார். மேலும் இது குறித்துப் பேசடெல்லிக்கும் போயுள்ளார்.

நாளை அவர் திரும்பி வந்த பிறகு தான் யார் யாருக்கு சீட் என்பது தெரியும்.

ராஜினாமா செய்த 25 பேரில் கிருஷ்ணசாமி, வாசன் ஆதரவாளர்கள் தலா 6 பேர் உள்ளனர். இந்த நிலையில்,இன்று ராஜினாமா செய்த கவுன்சிலர்களான சங்கர், மணிலால் ஆகியோர் திடீரென வேட்பு மனுத் தாக்கல்செய்தனர். இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகும் முன்பே வேட்பு மனு தாக்கல் செய்தது குறித்து மணிலால் கூறுகையில்,சென்னை மாநகராட்சியில் காங்கிஸ் சார்பில் நான் மட்டும்தான் தொடர்ந்து 2 முறை கவுன்சிலராகதேர்ந்தெடுக்கப்பட்டவன்.

யாராலும் வெற்றி பெறவே முடியாத நிலை இருந்தபோது கூட காங்கிரஸ் சார்பில் நான் மட்டும்தான் வெற்றிபெறறேன். எனவே நான்தான் மீண்டும் நிறுத்தப்படுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

கட்சிக்கு நான் கட்டுப்படுவேன். நல்ல நாள் என்பதால் மனு தாக்கல் செய்தேன். காங்கிரஸ் கவுன்சிலர்களுக்குமீண்டும்ம போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என மாநில தலைவர் உறுதியளித்துள்ளார். எனவே நான் நிச்சயம்போட்டியிடுவேன் என்றார்.

இவர்களைப் போலவே மேலும் சில கவுன்சிலர்களும் வேக வேகமாக வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடும் எனகாங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+