முதலிரவில் மனைவியை ஆபாச படம் எடுத்த கணவன்?:பெண்ணின் தந்தை தற்கொலை
கடலூர்:முதல் இரவின்போது மனைவியை கணவரும் அவரது மாமாவும் சேர்ந்து ஆபாச வீடியோ படம் எடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதைக்கேள்விப்பட்டு அந்தப் பெண்ணின் தந்தை மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் தாழங்குடா மீனவர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவருக்கு செல்வி என்ற மனைவியும், ரேவதி உள்பட 4 மகள்களும் உள்ளனர்.
ரேவதிக்கும் (வயது 22) பரங்கிப்பைட்டை சின்னூர் கிராமத்தைச் சேர்ந்த தேவநாத் (28) என்பவருக்கும் பரங்கிப்பேட்டையில் கடந்தஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. தேவநாத் துபாயில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.
திருமணம் முடிந்து இரவில் தேவநாத் வீட்டில் முதலிரவு அறைக்குள் நுழைந்த ரேவதிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ரேவதியும் தேவநாத்துக்கும்தாம்பத்யத்தில் ஈடுபட்ட காட்சியை ஒருவர் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார். இதைப் பார்த்துவிட்ட ரேவதி அலறியுள்ளார்.
இதையடுத்து அன்றைய இரவை நரக வேதனையுடன் கழித்த ரேவதி மறுநாள் அதிகாலை வீட்டை விட்டு ஓடி வந்து வெளியில் உள்ளதொலைபேசியகத்தில் இருந்து தனது சித்தப்பா முருகனுக்கு போன் செய்து, தன்னை மாப்பிள்ளை வீட்டார் ஆபாசமாக படம் பிடிப்பதாகவும்,கொடுமைப்படுத்துவதாகவும் கதறி அழுதார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த முருகன் மற்றும் உறவினர்கள் மாப்பிள்ளை வீட்டுக்கு விரைந்துவந்தனர்.
அவர்களைப் பார்த்ததும் கதறி அழுத ரேவதி தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லி குமுறினார். இதையடுத்து ரேவதியை தங்களுடன் கூட்டிக்கொண்டு ஊர் திரும்பினர் முருகன் மற்றும் உறவினர்கள். மேலும் ரேவதிக்கு நடந்த கொடுமை குறித்து ரெட்டிசாவடி காவல் நிலையத்தில் புகார்கொடுத்தனர்.
அதில், மாப்பிள்ளை தேவாவும் அவரது மாமா கந்தனும் பெண்களுடன் உடல் உறவு கொண்டு அதை வீடியோவில் படம் எடுத்து விற்றுவந்துள்ளனர். ரேவதியின் வீடியோவையும் அவரது மாமா எடுத்துச் சென்றுவிட்டார் என்று கூறியுள்ளனர். இதையடுத்து தேவாவிடம் போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில், தனது மகளின் நிலையை எண்ணி வேதனை அடைந்த ரேவதியின் தந்தை சந்திரன், மனம் உடைந்து தூக்கு மாட்டிக் கொண்டுபரிதாபமாக தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் தாழங்குடா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரேவதி மன நிலை பாதிக்கப்பட்டவரா?:
இந் நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் ரேவதி மன நிலை பாதிக்கப்பட்டவர் போல தெரிவதாக கூறுகின்றனர். ஆபாச படம்எடுக்கப்பட்டதற்கான அறிகுறியே இல்லை என்றும் கூறுகின்றனர்.
மன நிலை பாதிக்கப்பட்டதை மறைத்து தனது பெண்ணை திருமணம் செய்து வைத்ததாலும், அது வெளியில் தெரிந்துவிட்டதாலும் தான் ரேவதியின்தந்தை சந்திரன் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறுகின்றனர்.
திருமணமான காலையில் இருந்தே தன்னை யாரோ கற்பழிப்பதாக புலம்பியிருக்கிறார் ரேவதி. உச்ச கட்டமாக தன்னை ஆபாச வீடியோ எடுத்ததாகக்கூறியுள்ளார்.
இது தொடர்பாக முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications