தொடரும் காங்கிரஸ் திருவிளையாடல்!
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை கட்சி மேலிடம் வெளியிடும் முன்பே மேலும் பல காங்கிரஸ்கவுன்சிலர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு 18ம் தேதி மறு தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாமக சார்பில் ஏற்கனவே கவுன்சிலர்களாக இருந்து ராஜினாமாசெய்தவர்களே மீண்டும் போட்டியிடுவர் என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
திமுச வேட்பாளர்களில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தரப்பில் முதலில் ராஜினாமா செய்தவர்களுக்கே மீண்டும் சீட்என கட்சி மேலிடம் உறுதியளித்திருந்தது. ஆனால் தற்போது சிலர் மாற்றப்படலாம் என பேச்சு அடிபடுகிறது.
இதனால் கடுப்பான, ஏற்கனவே ராஜினாமா செய்த கவுன்சிலர்கள் சிலர் அவசரம் அவசரமாக வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.ஏற்கனவே 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
2வது வார்டு வடிவேலு, 9வது வார்டு தங்க வாசுகி, 11வது வார்டு கிருபாகரன், 20வது வார்டு ரூப் சந்திரன், 31வது வார்டு செல்லப்பன், 36வதுவார்டு திருவேங்கடம், 70வது வார்டு சுரேஷ், 73வது வார்டு சரஸ்வதி, 97வது வார்டு கோவிந்தசாமி, 109வது வார்டு ஜானகி, 117வது வார்டுவிஸ்வநாதன், 123வது வார்டு ஜெயகலா பிரபாகரன், 124வது வார்டு சுசீலா, 151வது வார்டு வேலாயுதம், 152வது வார்டு பாலசுப்ரமணியம்ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்தனர்.
இவர்கள் தவிர 40வது வார்டில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட பாலமுருகன் மனு தாக்கல் செய்தார். நேற்று தைப்பூசம் என்பதால்வேட்பு மனு தாக்கல் செய்தோம் என்று காங்கிரஸ் வேட்பாளர்கள் தெரிவித்தனர்.
இன்னும் ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ள நிலையில் கிட்டத்தட்டபாதிக்கும் மேற்பட்ட வார்டுகளில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications