காவிரி தீர்ப்பு-கர்நாடகத்தில் தீவிர பாதுகாப்பு
டெல்லி:காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு நாளை மறுதினம் (5ம் தேதி) வெளியாவதால் தமிழக, கர்நாடக விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பில்உள்ளனர். கர்நாடகத்தில் கலவர பயமும் தொற்றிக் கொண்டுள்ளது.
தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்கள் காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்துதமிழகத்தின் கோரிக்கையை ஏற்று கடந்த 1990ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கின் உத்தரவின் பேரில் காவிரி நடுவர் மன்றம்அமைக்கப்பட்டது.
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரத் தாமதமாகும் என்பதால் இடைக்கால உத்தரவை நடுவர் மன்றம் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுகோரியது. ஆனால் இதை எதிர்த்து கர்நாடகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கலாம் என அனுமதி அளித்தது.இதையடுத்து கடந்த 1992ம் ஆண்டு இடைக்கால உத்தரவை நடுவர் மன்றம் பிறப்பித்தது. இதையடுத்து தமிழகத்தில் பெரும் கலவரம் வெடித்தது.
இடைக்கால உத்தரவின்படி ஆண்டுக்கு 205 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடகம் விடுவித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அந்தஉத்தரவை கர்நாடகம் முழுமையாக அமல்படுத்தியதில்லை.
இந் நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வந்த நடுவர் மன்ற விசாரணை முடிவடைந்து, வருகிற 5ம் தேதி இறுதித் தீர்ப்பு வெளியாகவுள்ளது.ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி என்.பி.சிங் தலைமையிலான 3 பேர் கொண்ட நடுவர் மன்றம் தீர்ப்பை அறிவிக்கவுள்ளது.
நான்கு மாநிலங்களின் மொத்த காவிரி நீராதாரம், விளைநிலங்களின் பரப்பளவு, மாநிலங்களின் நீராதாரம் உள்ளிட்ட 6 முக்கிய அம்சங்களைஅளவுகோலாகக் கொண்டு கடந்த 17 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. அதன் அடிப்படையில் தீர்ப்பு வெளியாகவுள்ளது.
தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடிக்கக் கூடும்என்ற அச்சம் பரவியுள்ளது.
இந் நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் பெங்களூரில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் தீர்ப்பு எப்படிப்பட்டதாகஇருந்தாலும் அதை எதிர்கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. மேலும் காவிரி படுகை மாவட்டங்களிலும் பெங்களூரிலும் பாதுகாப்பைபலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிக பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு என்பதால் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications