தேர்தல்-தடை விதிக்க நீதிமன்றம் மீண்டும் மறுப்பு
சென்னை:சென்னை மாநகராட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தெரிவித்துள்ளது. அதிமுக தொடர்ந்தவழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறி தேர்தல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மறு தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும், தேர்தல் ஆணையரை மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி அதிமுக சார்பில்எம்.எல்ஏ. ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதுஅரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம்இல்லை.
மேலும் தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. இதை தேர்தல் ஆணையம்தான் செய்ய வேண்டும் என்றுவாதிட்டார்.
அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி, தேர்தல் ஆணையராக சந்திரசேகரன் செயல்படுவதில் அதிமுகவுக்கு உடன்பாடு இல்லை. அவரதுதலைமையில், தேர்தல் முறையாக நடைபெறும் என்பது சந்தேகம்தான். எனவே தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோ>னார்.
ஆனால் இந்தக் கோரிக்கையை நிராகரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லைஎன்று கூறி தடை விதிக்க மறுத்து விட்டார்.
மேலும், தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் மீது நேரடிக் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டிருப்பதால் அவர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றுகூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வருகிற 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications