தீவிர பிரசாரத்துக்கு ஆயத்தமாகும் விஜயகாந்த்!
சென்னை:சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கான மறு தேர்தல் பிரசாரத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆயத்தமாகி வருகிறார்.
சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கும் வருகிற 18ம் தேதி மறு தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் திமுக கூட்டணியினர்அனைவரும் போட்டியிடுகின்றனர். மறுபக்கம் எதிர்க்கட்சித் தரப்பில் பாஜக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் மட்டுமே உள்ளன.
அதிமுகவும், மதிமுகவும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. எனவே ஆளுங்கட்சித் தரப்பு படு உற்சாகமாக உள்ளது. கடந்தமுறையைப் போல சிரமப்படாமல், இந்த முறை எளிதாக 100 வார்டுகளிலும் வெற்றி பெற்று விடலாம் என ஆளுங்கட்சித் தரப்பில் எண்ணம்நிலவுகிறது.
ஆனால் போட்டியை கடுமையாக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமாக 100 வார்டுகளிலும் அனல்பறக்கும் பிரசாரத்திற்கு அவர் ஆயத்தமாகி வருகிறார்.
95 வார்டுகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து விட்ட விஜயகாந்த் அடுத்து பிரசாரத்திற்கு திட்டமிட்டு வருகிறார். கடந்த முறை வாங்கியஓட்டுக்களை விட இந்த முறை கூடுதலாக வாக்குகளை அள்ளிக் காட்டும் முனைப்பில் உள்ளார்.
மேலும் தனக்கு அதிமுக, மதிமுகவினரின் மறைமுக ஆதரவு கிடைக்கும் என்றும் விஜய்காந்த் கணக்கு போடுகிறார்.
100 வார்டுகளிலும் வீதி வீதியாக சென்று விஜயகாந்த் பிரசாரம் செய்யவுள்ளார். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு விஜயகாந்த் பிரசாரம் செய்யக்கூடும் என்று தெரிகிறது. இதற்காக பிரசார வேனும் தயாராக உள்ளது.
பிரசாரத் திட்டம் குறித்து கட்சியின் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் விஜயகாந்த் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications