முதல்வர் விழாவில் துணை நடிகையால் சலசலப்பு
சென்னை:சென்னை கலைஞர் அரங்கில் நடந்த செஞ்சி ராமச்சந்திரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி முன்புவிழுந்து புரண்டு துணை நடிகை கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போட்டி மதிமுக பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரனின் மகள் திருமண வரவேற்புக்கு அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர்அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் முதல்வர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு பெண் நைட்டியுடன் உள்ளே புகுந்தார். முதல்வர் பேசிக் கொண்டிருந்தமேடைக்கு முன்பு வந்த அவர் தலைவரே என் காலைப் பாருங்க, என்னைக் காப்பாத்துங்க என்று கூறி கூச்சலிட்டார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்பெண்ணை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் வராமல் கீழே விழுந்துஉருண்டு புரண்டு கதறி அழுதார்.
இருப்பினும் போலீஸார் மிகுந்த சிரமப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அவரது பெயர் மலர்க்கொடி. காரைக்குடியைச் சேர்ந்தவர். துணைநடிகை. வடபழனியில் வசித்து வரும் மலர்க்கொடியின் கால்கள் அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக வீங்கிப்போயுள்ளது.
இதுதொடர்பாக ஏற்கனவே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு அவர் புகார் கூறி கடிதம்அனுப்பியிருந்தார். இதையடுத்து அவருக்கு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார் ராமச்சந்திரன்.
இந்த நிலையில் நேற்று முதல்வர் விழாவில் கலந்து கொண்டு அவரது கவனத்தை ஈர்க்க முயலும் வகையில் திடீரென புகுந்து கூச்சல் போட்டுள்ளார்மலர்க்கொடி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications