ரெளடி சங்கர் என்கெளன்டரில் சுட்டு கொலை?
புதுக்கோட்டை:நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களை கலக்கி வந்த பிரபல ரெளடி மணல்மேடு சங்கர் போலீஸ் பிடியிலிருந்துதப்பிச் செல்ல முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டான். ஆனால், அவன் சாலை விபத்தில் பலியானதாகபோலீசார் கூறுகின்றனர்.
கும்பகோணம் நீதிமன்றத்தில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு வேனில் கொண்டு செல்லும்போது, அவன் தப்பமுயன்றதால் அவனை போலீசார் எண்கெளன்டரில் சுட்டுக் கொன்றதாகவே தெரிகிறது.
வேதாரண்யத்தையடுத்து மணல்மேடு பகுதியை சேர்ந்தவன் இந்த சங்கர். இவன் மீது ஏகப்பட்ட கொலைவழக்குகள் உள்ளன.
மணல்மேடு பஞ்சாயத்துத் தலைவர் அஞ்சப்பா என்பவரைக் கொலை செய்த வழக்கு, மணல்மேடு,மயிலாடுதுறை, கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் அருள் கொலை வழக்கு, போதைப்பொருள் கடத்தல்,போதை பொருள் கடத்திய இலங்கையைச் சேர்ந்த செல்வகுமார், இம்தியாஸ் ஆகியோரை கடத்திச் சென்றவழக்கு ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை.
நாகப்பட்டிணம், புதுக்கோட்டை மற்றும் திருச்சி வரை இவனது அடிதடி செயல்கள் பரவின. இதையடுத்து இவன்கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
அங்கிருந்து ஒவ்வொரு வழக்கு விசாரணைக்கும் பல்வேறு நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுவந்தான். இந் நிலையில் தமிழகத்தில் முக்கிய ரெளடிகளை போலீசார் எண்கெளண்டரில் காலி செய்து வந்ததால்மணல் மேடு சங்கரும் பீதியில் இருந்தான்.
தான் காலியாவதைத் தடுக்க என்னையும் கொல்லப் போகிறார்கள் என்னையும் போலீசார் கொல்லப்போகிறார்கள் என ஒவ்வொரு முறையும் கோர்ட்டுக்கு வரும்போதும் நிருபர்களைப் பார்த்து கத்துவான் சங்கர்.
2 மாதங்களுக்கு முன் பந்தநல்லூர் அருள் கொலை வழக்கு தொடர்பாக கும்பகோணம் நீதிமன்றத்துக்குவந்தபோது, என்னை போலீசார் கொலை செய்து விடுவார்கள். என்னை அவர்களுடன் அனுப்பக்கூடாது.எனக்கு தனி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிமன்ற வாசலில் சங்கர் கூச்சலிட்டான்.
இதையடுத்து நீதிபதியின் உத்தரவுப்படி அவனுக்கு இயந்திர துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டது.
நேற்று காலை மதுரை சிறையிலிருந்து சங்கரை மயிலாடுதுறைக்கு போலீஸார் வழக்கு விசாரணைக்காககும்பகோணம் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.
விசாரணை முடிந்ததும் டெம்போ டிராவலர் வேனில் மீண்டும் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். வேனில்டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மற்றும் 6 போலீசார் இருந்தனர்.
இரவு 11 மணியளவில் வேன் புதுக்கோட்டை மாவட்டம் பழைய கந்தர்வக்கோட்டை அடுத்த புனல்குளம் புதுநகர் என்ற இடத்தில் முந்திரிக்காடு பகுதியில் சென்றபோது ரோட்டோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது.
அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது மணல்மேடு சங்கரை போலீசார் துப்பாக்கியால்சுட்டுக் கொன்றதாக தெரிகிறது.
ஆனால், வேன் கவிழ்ந்ததில் தான் சங்கர் இறந்ததான் என போலீசார் கூறுகின்றனர். வேன் கவிழந்ததில் சங்கர்உட்பட போலீசார் பலத்த காயம் அடைந்ததாகவும், இதில் சங்கர் இறந்தாகவும் கூறுகின்றனர்.
சங்கரின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலை யாரும் பார்க்க போலீஸார்அனுமதிக்கவில்லை. அவர் விபத்தில் இறந்தானா அல்லது போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்தானா என்பதுதெரியவில்லை.
போலீஸ் அதிகாரிகளும் இதுகுறித்து எதுவும் சொல்ல மறுத்து விட்டனர்.


Click it and Unblock the Notifications
