வேட்பாளர்களை மிரட்டுகிறார்கள்: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை:போட்டியிலிருந்து விலகுமாறு தேமுதிக வேட்பாளர்களை மிரட்டுகிறார்கள் என்று அக்கட்சியின் தலைவர்விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விஜயகாந்த்,

தேர்தல் ஜனநாயகம முறைப்படி நடக்கும் என்று அறிவித்து விட்டு இப்போது புதிய கட்சியான தேமுதிகவேட்பாளர்களை, தேர்தலில் இருந்து விலகும்படி தனித் தனியாக மிரட்டுகிறார்கள்.

நேர்மையாளர்கள் போல பேசி விட்டு, லட்சக்கணக்கில் பணம் தருகிறோம், போட்டியிலிருந்து விலகி விடுங்கள்என்று கூறி மிரட்டுகிறார்கள். ரவுடிகளை வைத்தும் மிரட்டுகிறார்கள்.

தேர்தலுக்கு முன்பே கட்டவிழ்த்து விடப்படும் அராஜகத்தை நாங்கள் நேருக்கு நேராக எதிர்க்கவில்லை.எதிர்த்தால் எங்களது நிலைமை என்னவாகும்?

ஒரு வேட்பாளரின் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து வாபஸாகும்படி அந்த வேட்பாளரைமிரட்டியுள்ளனர். குழந்தைகளைக் கடத்தி வைத்து மிரட்டுவதாகவும் தகவல் வந்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையர், டிஜிபி, ஆளுநர், முதல்வர், பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோருக்குதந்திகள் அனுப்பியுள்ளோம்.

இந்த மாதி>யான மிரட்டல்களுக்கு நாங்கள் பயந்து விட மாட்டோம். எனது சொத்தே அழிந்தாலும் சரி,தொண்டர்களைக் காப்பாற்ற பின் வாங்க மாட்டேன். என்ன பிரச்சினை வந்தாலும் தேர்தல் களத்திலிருந்து விலகமாட்டோம். அராஜகத்துக்கு யார் காரணம் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்வோம் என்றார் விஜயகாந்த்.

14 தேமுதிக வேட்பு மனுக்கள் தள்ளுபடி :

இந் நிலையில் சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த 14 தேமுதிக வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மாநகராட்சி மறு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள் கிழமையுடன் முடிவடைந்தது. 700 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.

10 மண்டலங்களிலும், அந்தந்த தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்பு மனு பரிசீலனை நடந்தது. பரிசீலனையின்போது போதிய ஆவணங்களை சேர்க்காதது, முறையாக இல்லாத மனுக்கள் எனமொத்தம் 31 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இவர்களில் 14 பேர் தேமுதிகவினர் என்பது குறிப்பிடத்தக்கது. 2 பேர் பாஜகவினர், மற்றவர்கள் சுயேச்சைகள்.

நாளைக்குள் மனுக்களை வாபஸ் பெற விரும்புபவர்கள் பெற்றுக் கொள்ளலாம். நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

விஜயகாந்த் கண்டனம்:

தேமுதிகவினரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக விஜய்காந்த் விடுத்துள்ள அறிக்கையில், மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது திமுகவைச் சேர்ந்தவர்கள் கும்பலாகசென்று தேர்தல் அதிகாரிகள் அலுவலகத்தில் புகுந்து கொண்டு தேமுதிக மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.

மேலும் வேட்பாளர்களையும், அவர்களை முன்மொழிந்தவர்களையும் தனிப்பட்ட முறையில் மிரட்டியுள்ளனர். அதுவுமின்றி வேட்பாளர் வீட்டுக்குச் சென்று தாய்மார்களையும், பள்ளிக்குச் சென்றுபிள்ளைகளையும் மிரட்டியுள்ளனர்.

இவர்களின் மிரட்டலுக்குப் பயந்து முன்மொழிந்து கையெழுத்துப் போட்ட பலர் கையெழுத்தே போடவில்லை என்று தப்பித்துள்ளனர். புரசைவாக்கம், சைதாப்பேட்டை, சேப்பாக்கம் என முக்கிய திமுகபுள்ளிகளின் பகுதிகளில்தான்தேமுதிக வேட்பாளர்களின் மனுக்கள் காரணமே சொல்லப்படாமல் நீக்கப்பட்டுள்ளன.

தேர்தல் கமிஷனும், போலீஸ் கமிஷனரும் கை கட்டி வேடிக்கை பார்க்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று கூறியுள்ளார்.

தேமுதிக உற்சாக பிரசாரம்:

வேட்பு மனு தாக்கல் முடிந்து விட்ட நிலையில் பிரசாரம் இன்னும் களை கட்டவில்லை. அதிமுகவும், மதிமுகவும் தேர்தலில் போட்டியிடாததால், படு மந்தமாக உளளது.

திமுக தரப்பு நாம் தானே வெற்றி பெறப் போகிறோம் என்ற எண்ணத்தில் மெத்தனமாக உள்ளது. அதேசமயம், தேமுதிக தரப்பில் புதிய உற்சாகம் காணப்படுகிறது. வீடு வீடாக சென்றுபிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

விஜயகாந்த் வீடடு வீடாக சென்று பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளதால் தேமுதிகவினர் மத்தியில் பெரும் நம்பிக்கை நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+