பாகிஸ்தானில் இந்து என்ஜீனியர் படுகொலை
கராச்சி:பாகிஸ்தானில் இந்து சமூகத்தைச் சேர்ந்த என்ஜினியர் கடத்தி செல்லப்பட்டு தலை துண்டித்து படுகொலைசெய்யப்பட்டார்.
பாகிஸ்தானில், ஐதராபாத் நகரில் கணேஷ் என்பவர், கடந்த ஆகஸ்டு மாதம் கடத்தப்பட்டார். ஹர்கத் உல்முஜாகிதீன் என் ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த 3 பேர் போலீஸ் உடையில் வந்து அவரைக் கடத்திச் சென்றனர்.
கணேஷ் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார், கணேஷைக் கண்டுபிடிக்க விசாரணையைதொடங்கினர்.
ஆனால், அதில் கணேஷ் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், கணேஷின் உடலை தீயிட்டு கொளுத்தி, பின் அரைகுறையாக கருகியஉடலை இடுகாட்டில் புதைத்துள்ளனர். இது தொடர்பாக ஒரு பகுதியில் சோதனை நடத்திய போது, அங்குசந்தேகத்திற்குரிய 3 பேர் பிடிபட்டனர்.
அவர்களிடமிருந்து கைத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு அடக்க தலத்தை சோதனை செய்து தோண்டிபார்த்தபோது கணேஷின் உடல் புதைக்கப்பட்டிருந்தது என்றனர்.
இதுகுறித்து அகில பாகிஸ்தான் சிறுபான்மையினர் கூட்டணி தலைவர் ஷபாஸ் பட்டி கூறுகையில், சிந்துமாநிலத்தில் இந்துக்கள் கடத்தப்பட்டு கொன்று வருவது அதிகரித்து வருகிறது. இது மக்கள் மனத்தில் பீதியைஏற்படுத்தியுள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications