ஆள் அனுப்புறேன், பதில் சொல்ல தயாரா?-ஜெ
சென்னை:உளவுத்துறையின் விசாரணையில் சிக்கிய டிஐஜி ஷகீல் முகம்மது அக்தர் குறித்து நான் அனுப்பும் நபரிடம் பத்தி>க்கையாளர்கள், டிவி நிருபர்கள் முன்நேருக்கு நேர் விவாதித்து பதில் தர முதல்வர் கருணாநிதியும், மத்திய உள்துறை இணை அமைச்சர் ரகுபதியும் தயாரா என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:
மத்திய உள்துறை இணை அமைச்சர் ரகுபதியின் தனிச் செயலாளர் முகம்மது ஷகீல் அக்தர், உளவு பார்த்த விவகாரத்தில் சிக்கி, மத்திய உளவுத்துறைவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இரவோடு இரவோக தமிழகப் பணிக்கு மாற்றியது குறித்து நேற்று முன்தினம் அறிக்கைவிட்டிருந்தேன்.
கடந்த 2002ம் ஆண்டு மத்திய சுகாதார துறை அமைச்சராக சத்ருகன் சின்ஹா இருந்தபோது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியானஷகீல் அக்தரை, மத்திய அமைச்சக பணிக்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
அவரது கோரிக்கையை ஏற்று ஷகீல் அக்தரை மத்தியப் பணிக்கு எனது அரசு அனுப்பி வைத்தது. பா.ஜ.க. ஆட்சி முடிந்து காங்கிரஸ் கூட்டணி அரசுஆட்சிக்கு வந்ததும், திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ரகுபதி ஷகீல் அக்தரை தனது அந்தரங்கச் செயலாளராக நியமித்துக் கொண்டார்.
உளவுத்துறைக்கு ஷகீல் அக்தர் மீது ஏன் சந்தேகம் வந்தது?. அவர் இரவோடு இரவாக ஏன் தமிழக பணிக்கு மாற்றப்பட்டார் என்பதுதான்இப்போதைய பிரச்சினை. இதற்கு ரகுபதியும், மத்திய அரசும்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் அமைதியாக இருக்க கருணாநிதிஅவசரப்பட்டு பதிலளித்து முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால் அவர்கள் மீது சந்தேகம் மேலும் வலுக்கிறது.
அவருக்கு நான் வீரப் பதத்தகம் வழங்கியதாக கருணாநிதி கூறுகிறார். குடியரசுத் தலைவரின் வீரப் பதக்கத்தை பெறுபவர்களை தேர்வு செய்யதனியாக ஒரு குழு இருக்கிறது.
அந்த குழுவின் பரிந்துரையின் பே>ல்தான் பதக்கம் பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படுவர். பின்னர் அவர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரித்து,அதன் பின்னர் சம்பிரதாய முறையில் பதக்கம் அளிக்கப்படுகிறது. அப்படித்தான் ஷகீல் அக்தருக்கும் பதக்கம் வழங்கப்பட்டது. ஆனால் ஏதோ, நான்தான் தேர்வு செய்தது போல கருணாநிதி பேசியுள்ளார்.
மத்திய அரசுப் பணியிலிருந்து மாநிலங்களுக்குத் திரும்பும் அதிகா>களை குறைந்தது சில வாரங்களாவது காத்திருப்போர் பட்டியலில்வைத்திருப்பார்கள். ஆனால் இரவோடு இரவாக, மின்னல் வேகத்தில் ஷகீல் அக்தர் பதவிக்கு வருகிறார் என்றால், அதற்கான பின்னணி என்ன?எத்தனை அதிகாரிகளுக்கு இவ்வாறு சில மணித் துளிகளில் மாநிலத்திற்கு வரவழைத்து கருணாநிதி பதவி கொடுத்திருக்கிறார் என்பதை அவர்பட்டியலிட வேண்டும்.
ஷகீல் அக்தரின் பழைய புகைப்படத்தைக் காட்டி அப்போது நல்லவர் என்று சொல்வதும் எந்த விதத்தில் நியாயம்? அவரை அவசர அவசரமாக பணிஅமர்த்த வேண்டிய அவசியம் என்ன? அதற்கான நிர்ப்பந்தம் என்ன?
சந்தேகம் என்றால் ரகுபதி ஓடி ஒளிய வேண்டிய அவசியமோ, கருணநிதி இரவோடு இரவாக பதவி கொடுக்க வேண்டிய அவசியமோ என்ன?
ஷகீல் அக்தரை கருணாநிதி விழுந்தடித்துப் பாதுகாக்கிறார் என்றால், அதில், ஆழமான, பயங்கரமான, கற்பனைக்கும் எட்டாத, கண்ணுக்குப்புலப்படாத பல மர்மங்கள் இருக்கும் என்பது அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் கருத்தாகும்.
இத்தனை பேரும் கருணாநிதியும், ரகுபதியும் நான் அனுப்பி வைக்கும் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு பத்திரிக்கையாளர்கள், டிவி நிருபர்கள்முன்னிலையில், முன் பதில் சொல்லத் தயாரா? என்று கேட்டுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications